மர்மரா கடல்
Appearance


மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மர்மரா கடலை கருங்கடலுடன் இணைக்கிறது. தார்தனெல்சு நீரிணை மர்மராக் கடலை, மத்திய தரைக்கடலின் பிரிவான ஏஜியக் கடலுடன் இணைக்கிறது.[1] இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ. 40°45′N 28°00′E / 40.750°N 28.000°E