உள்ளடக்கத்துக்குச் செல்

மரைவில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரை வில்லை ஒன்று திருகாணியொன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

மரை வில்லை (ஆங்கிலத்தில் nut) எனப்படுவது ஒரு மரை இணைப்பான் ஆகும். இந்த வன்பொருளானது மரையுடன் கூடிய துளையினைக் கொண்டிருக்கும்.[1][2][3]

பயன்பாடு

[தொகு]

பொதுவாக ஒரு மரையாணியின் (bolt) இணையாக மரை வில்லை பயன்படுத்தப்படும். இயந்திரமொன்றின் இரு பாகங்களை வலுவாக இணைத்திட மரையாணி – மரை வில்லை எனும் இணை பயன்படுத்தப்படும். சில நேரங்களில் திருகாணி (screw) – மரை வில்லை எனும் இணையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தப்படும். ஒரு இயந்திரக் கூட்டமைப்பில் அதிர்வுகள் அல்லது சுழற்சி காரணமாக, மரை வில்லை சில நேரங்களில் தளர்வடையலாம். இதைத் தவிர்க்க ஒட்டுப்பசை, பாதுகாப்புக் கடையாணி, நைலான் செருகல்கள், சற்றே நீள்வட்டமான மரைகள் போன்றவை கூடுதலாக பயன்படுத்தப்படும். பெரும்பாலான மரை வில்லைகள், அறுங்கோண வடிவத்தினைக் கொண்டிருக்கும். திருகுச்சாவியின் (spanner) அணுக்கம் சிறப்பாக இருக்கவே இந்த அறுங்கோண வடிவமைப்பு. சிறகு மரை மற்றும் சிறைப்பட்ட மரை ஆகியன மேம்பட்ட சிறப்புக் காரணங்களுக்காக வடிமைக்கப்பட்ட மரை வில்லை வகைகளாகும்.

மரை வில்லைகள் பல்வேறு அளவுகளில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சிட்னி துறைமுகப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மரை வில்லையைப் படத்தில் காணலாம்.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gong, Hao; Liu, Jianhua; Feng, Huihua (2022-02-01). "Review on anti-loosening methods for threaded fasteners" (in en). Chinese Journal of Aeronautics 35 (2): 47–61. doi:10.1016/j.cja.2020.12.038. பன்னாட்டுத் தர தொடர் எண்:1000-9361. 
  2. Ferguson, Donna (16 September 2024). "Solved: the mystery of how Victorians built Crystal Palace in just 190 days". The Guardian. https://www.theguardian.com/artanddesign/2024/sep/16/solved-the-mystery-of-how-victorians-built-crystal-palace-in-just-190-days. 
  3. "A reliable locking performance using a two nut design". Fastener + Fixing Technology (in ஆங்கிலம்). Archived from the original on 2022-12-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரைவில்லை&oldid=4101732" இலிருந்து மீள்விக்கப்பட்டது