மருத்துவ ஆராய்ச்சிக்கான ஜேன் காபின் சைல்டுசு நினைவு நிதி
உருவாக்கம் | சூன் 11, 1937 |
---|---|
நிறுவனர் | இசுடார்லிங் வின்சுடன் சைல்ட்சு & ஆலிசு எசு. சைல்ட்சு |
வகை | மருத்துவம், மருத்துவ அறிவியல் தொடர்பான ஆய்வுகள் |
மருத்துவ ஆராய்ச்சிக்கான ஜேன் காபின் சைல்டுசு நினைவு நிதி (Jane Coffin Childs Memorial Fund for Medical Research) என்பது 1937 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு விருதாகும். புற்றுநோயைத் தாக்கும் மருத்துவ மற்றும் தொடர்புடைய அறிவியலில் ஆராய்ச்சிக்காக "ஜேன் காப்பின் சைல்டுசு முதுமுனைவர் பட்டத்தை" வழங்குகிறது.[1]
வரலாறு
[தொகு]இந்த நிதி 11 சூன் 1937 அன்று ஜேன் காபின் சைல்ட்சின் நினைவாக இசுடர்லிங் வின்சுடன் சைல்ட்சு மற்றும் ஆலிசு எசு. சைல்ட்சினால் நிறுவப்பட்டது.
விளக்கம்
[தொகு]தற்போது, இந்த அறக்கட்டளை ஆண்டுக்கு 20 முதல் 30 உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்த உதவித்தொகை அமெரிக்காவில் மிகவும் மதிப்புமிக்க உதவித்தொகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வாளர்களுக்கு மூன்று ஆண்டு வரை நிதி வழங்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புற்றுநோய் ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் மற்றும் பிற மனித நோய்களைப் பற்றிய நமது புரிதலின் முன்னேற்றம் போன்ற துறைகளில் முக்கிய அறிவியல் பங்களிப்புகளைச் செய்துள்ள ஆய்வாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற்ற இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் உடலியங்கியல், மருத்துவம் மற்றும் வேதியியல் துறைகளில் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.
பல ஆண்டுகளாக, இந்த நிதியம் தன் அறிவியல் ஆலோசகர்கள் குழுவிற்காகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளை ஈர்த்துள்ளது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, முன்னாள் குழு உறுப்பினர்களில் 17 பேர் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.[2]
அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளவர்கள்:
- புரூசு ஆல்பர்ட்சு
- போனி பாசலர்
- டேவிட் பால்டிமோர்
- சூ பிக்ஜின்சு
- எலிசபெத் பிளாக்பர்ன்
- பீட்டர் கிரெசுவெல்
- எலைன் புக்சு
- ஜோ கால்
- டோனி ஹண்டர்
- டேவிட் ஜூலியஸ்
- சிந்தியா கென்யன்
- ஜான் குரியன்
- தாம் மனியாடிசு
- சூசன் மெக்கானெல்
- இலாயிட் ஓல்ட்
- தாமசு டி. பொல்லார்ட்
- ரேன்டி சேக்மேன்
- சார்லசு ஜே. செர்
- பமீலா ஏ. சில்வர்
- லுபெர்ட் இசுட்ரையர்
- கிரகாம் சி. வாக்கர்
- கீத் யமமோட்டோ
மருத்துவ ஆராய்ச்சிக்கான ஜேன் காபின் சைல்டுசு நினைவு நிதி, புற்றுநோய் மற்றும் பிற மனித நோய்களின் காரணங்கள் மற்றும் தோற்றம் குறித்த ஆராய்ச்சியைத் தொடர அதிகத் தகுதி வாய்ந்த மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக இந்த நிதி உதவி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நோய் தொடர்பான ஆராய்ச்சியைத் தொடரும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதே நிதியத்தின் குறிக்கோள். அதே நேரத்தில் நிதியத்தின் கருத்தாக்கத்தின் உணர்வுக்கு ஏற்ப தனிநபரின் மதிப்பு மற்றும் பங்களிப்பை ஊக்குவிப்பதும் வலியுறுத்துவதும் ஆகும்.
குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாளர்கள். [3]
- ஜெர்மி எம். பெர்க்
- டேவிட் எசு. கபிசோ
- ஜேனட் ஹோவெல் கிளார்க்[4]
- மார்கரெட் டி. புல்லர்
- ஜுவான் ஈ. கோன்சலஸ்
- சூசன் கோட்சுமேன்
- ஏனோச் குவாங்
- லிகுன் லூ
- லாரா மகால்
- வில்லியம் மெக்கின்னிசு
- ஜெசிகா போல்கா[5]
- ஜேம்சு ஏ. சாபிரோ
- ஜோன் ஏ. இசுடெய்ட்சு
- கிறிசுடோபர் சாங்
- மைக்கேல் சி. சாங்
- கிளேர் எம். வாட்டர்மேன்-இசுடோர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About the Fund", Yale University (last visited 2009 May 8).
- ↑ "About the Fund". Jane Coffin Childs Memorial Fund for Medical Research. பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
- ↑ See JCCNewsletter, including lists of fellows.
- ↑ Fee, Elizabeth; Rodman, Anne Clark (October 1985). "Janet Howell Clark: Physiologist and Biophysicist (1889-1969)". The Physiologist 28 (5): 397–400. https://archive.org/details/sim_physiologist_1985-10_28_5/page/397.
- ↑ "Jessica Polka - Jane Coffin Childs Memorial Fund". Jane Coffin Childs Memorial Fund.