உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா ஹில்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுநியூ அவென்ஜர்ஸ் #4 (மார்ச் 2005)
உருவாக்கப்பட்டது
  • பிரையன் மைக்கேல் பெண்டிஸ்
  • டேவிட் பிஞ்ச்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புமரியா ஹில்
குழு இணைப்பு
பங்காளர்கள்அயன் மேன்
நிக் ப்யூரி
கேப்டன் அமெரிக்கா
திறன்கள்
  • பயிற்சி பெற்ற முகவர்
  • ஆயுதத்தில் அதிக பயிற்சி பெற்றவர்
  • பல்வேறு ஆயுதங்களின் தேர்ச்சி

மரியா ஹில் (ஆங்கில மொழி: Maria Hill) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு பெண் மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். சிகாகோவில் பிறந்த ஹில், அமெரிக்காவின் ஆயுதப் படையில் சேர்ந்து பின்னர் ஷீல்ட் அணியில் இணைகிறார். பின்னர் ஷீல்ட் இன் முன்னாள் இயக்குநராக இருந்தார். மற்றும் அவென்ஜர்ஸ் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பல்வேறு கதைக்களங்களில் இவர் பாத்திரம் தோன்றியுள்ளது.

இந்தக் கதாப்பாத்திரத்தை பிரையன் மைக்கேல் பெண்டிஸ் மற்றும் டேவிட் பிஞ்ச் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். மரியாவின் தோற்றம் மார்ச் 2005 இல் இருந்தது நியூ அவென்ஜர்ஸ் #4 இருந்து தோற்றுவிக்கப்பட்டது. மாவல் திரைப் பிரபஞ்ச திரைப்படத்தில் நடிகை கோபி ஸ்மல்டேர்ஸ் என்பவர் மரியா ஹில் என்ற கதாபாத்திரத்தில் தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[1] அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018),[2] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019),[3] இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)[4] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் என்ற தொலைக்காட்சி தொடரில் முதல் பருவத்தின் இரண்டு அத்தியாயங்களிலும் இரண்டாவது பருவத்தில் ஒரு அத்தியாயத்திலும் தோன்றினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Graser, Marc (October 29, 2012). "Frank Grillo to play Crossbones in 'Captain America' sequel". Variety. Archived from the original on October 29, 2012. Retrieved October 29, 2012.
  2. Jimmy Kimmel Live! (October 17, 2016). Cobie Smulders Spills the Beans on Avengers: Infinity War and it was Everything!. YouTube. Archived from the original on அக்டோபர் 18, 2016. Retrieved October 17, 2016. Cobie finally spills the beans on the next Marvel movie she's in – The Avengers: Infinity War." (from the video's description)
  3. Hood, Cooper (April 27, 2019). "Every Character In Avengers: Endgame". Screen Rant. Retrieved April 28, 2019.
  4. Buchanan, Kyle (August 7, 2018). "Spider-Man: Far From Home Adds Samuel L. Jackson, Cobie Smulders". Vulture.com. Archived from the original on August 7, 2018. Retrieved August 7, 2018.
  5. Thompson, Bob (November 7, 2013). "Vancouver’s Cobie Smulders is on a roll (with video)". Calgary Herald இம் மூலத்தில் இருந்து நவம்பர் 8, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131108135209/http://www.calgaryherald.com/entertainment/celebrity/Vancouver%2BCobie%2BSmulders%2Broll%2Bwith%2Bvideo/9139948/story.html. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ஹில்&oldid=3530246" இலிருந்து மீள்விக்கப்பட்டது