உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா மீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா மீஸ்
பிறப்பு(1931-02-06)6 பெப்ரவரி 1931
ஹில்லெஷெய்ம், ரைன் மாகாணம், பிரஷியா, ஜெர்மனி
இறப்பு15 மே 2023(2023-05-15) (அகவை 92)
கல்வி
பணி
  • சமூகவியல் பேராசிரியர்
  • எழுத்தாளர்
பணியகம்கோதே கல்வி நிறுவனம் (1963–1967)
கொலோன் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (1972–1974; 1981–1993)
சமூக ஆராய்ச்சிக்கான பிராங்பேர்ட் பல்கலைக்கழகம் (1974–1977)
சர்வதேச சமூக ஆய்வு நிறுவனம் (1979–1981)
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • Indian Women and Patriarchy (1980)
  • Patriarchy and Accumulation on a World Scale (1986)
  • Women: The Last Colony (1988)
  • Ecofeminism (1993)
  • The Subsistence Perspective (1999)
வாழ்க்கைத்
துணை
சரல் சர்க்கார் (தி. 1976)

மரியா மீஸ் (Maria Mies, 6 பிப்ரவரி 1931 – 15 மே 2023) என்பவர் ஒரு ஜெர்மன் சமூகவியல் பேராசிரியர், மார்க்சிய பெண்ணியலாளர், மகளிர் உரிமை ஆர்வலர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் அவர் எரிமலை ஈஃபில் பிராந்திய கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர், துவக்கத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். துவக்கப் பள்ளி ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக தகுதி பெற்ற பிறகு, ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் பணிபுரிய வேண்டும் என்ற நம்பிக்கையில் கோதே கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இந்தியாவின் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் பணியமர்த்தப்பட்ட இவர், தன் மாணவர்கள் தங்கள் கல்விக்காக ஜெர்மன் பாடத்தைத் தேர்ந்தெடுத்தாலும், பெரும்பாலான மாணவிகள் திருமணத்தைத் தவிர்ப்பதற்காக தனது வகுப்பைத் எடுத்ததைக் கண்டறிந்தார். கொலோன் பல்கலைக்கழகத்தில் படிக்கத் திரும்பிய இவர், 1971 இல் இந்தியாவில் பெண்களுக்கான சமூக எதிர்பார்ப்புகளின் முரண்பாடுகள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார், அடுத்த ஆண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

1960களின் பிற்பகுதியிலிருந்து சமூக இயக்கங்களில் மீஸ் தீவிரமாக செயல்பட்டார். இவரது செயல்பாடுகள் பெண் விடுதலை, அமைதிக்கு ஆதரவாகவும், வியட்நாம் போர், அணு ஆயுதங்கள் போன்றவற்றிற்கு எதிராகவும் இருந்தது. இவர் 1970 களில் கொலோன் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராங்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைக் கற்பித்தார். பெண் வரலாற்று குறித்த அறிவு போதாமையை உணர்ந்த இவர், ஜெர்மனியில் பெண்கள் தங்குமிடத்தைக் பெண்கள் தங்குமித்தைக் கண்டுபிடித்து அதுகுறித்து விரிவுரைகளை வழங்கினார். 1979 ஆம் ஆண்டில், இவர் டென் ஹேக்கில் உள்ள சர்வதேச சமூக ஆய்வு நிறுவனத்தில் பெண்ணியல் படிப்புகளை கற்பிக்கத் தொடங்கினார். மேலும் பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையில் வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கான முதுகலைப் பட்டப்படிப்பை நிறுவினார்.

1981 இல் ஜெர்மனியின் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய மீஸ், சூழல்சார் பெண்ணிய இயக்கம், மரபணுப் பொறியியல் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு எதிரான செயல்பிட்டிலும் ஈடுபட்டார். பெண்களின் உழைப்பை மதிப்பிழக்கச் செய்து, அதை பார்வையிலிருந்து மறைக்கும் செயல்முறைகளுக்கு "ஹவுஸ்வைஃபைசேஷன்" என்ற சொற்றொடரை இவர் உருவாக்கினார். 1980 களில் இருந்து இவர் முதலாளித்துவம், ஆணாதிக்கம், காலனித்துவம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை விரிவாக எழுதினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மரியா மீஸ்: மகளிருக்கான தனித்த குரல்". 2024-05-15. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_மீஸ்&oldid=4044112" இலிருந்து மீள்விக்கப்பட்டது