உள்ளடக்கத்துக்குச் செல்

மரியாதைத் தலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியாதைத் தலைப்பு அல்லது மரியாதை அடைமொழி என்பது ஒருவரை அழைக்கும் போது அவரது பெயருடன் அடைமொழியாகப் பயன்படுத்தும் மரியாதை தரும் சொல் ஆகும். ஏனைய மொழிகளுக்குச் சமாந்தரமாக தமிழில் பல மரியாதைத் தலைப்புகளைக் காணலாம். எ.கா.: திரு, திருமதி, செல்வி, வணக்கத்துக்குரிய இவை ஒருவரின் தொழில்சார் அடைமொழியாக அல்லாமல் சமூகம் சார் அடைமொழியாகக் காணப்படுகின்றது.

பொதுவான மரியாதைத் தலைப்புகள்

[தொகு]
  • திரு: திருமணமான ஆணைக் குறிக்கும் மற்றும் 18 வயது நிரம்பிய ஆணையும் குறிக்கும்.திருவாளர் என்பதன் சுருக்கம்.
  • திருமதி: திருமணமான பெண்ணைக் குறிக்கும், திருவாட்டி என்பதன் சுருக்கம்.
  • திருமிகு: திருமணமான ஆண்,பெண் இருவரையும் குறிக்கும்.
  • செல்வி: திருமணம் ஆகாத பெண்னைக் குறிக்கும்.
  • செல்வன்:18 வயதுக்கு குறைவான ஆணைக் குறிக்கும்.

பெரும்பாலும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படுகிறது.

மதம் சார் மரியாதைத் தலைப்புகள்

[தொகு]
  • சங்கைக்குரிய:
  • வணக்கத்துக்குரிய:
  • போற்றுதலுக்குரிய:
  • அருட்திரு:
  • தவத்திரு:
  • சுவாமி:
  • சிவத்திரு:
  • யதிராஜர்:

முஸ்லிம்கள்

[தொகு]
  • ஹாஜி - ஹஜ் செய்தவர்களை அழைப்பதற்காக
  • ஜனாப் - வயதானவர்களின் பெயருக்கு முன்பு, ஹாஜி ஜனாப் என்றும் சேர்த்து அழைக்கிறார்கள்
  • மர்ஹும் - இறந்தவர்களின் பெயருக்கு முன்பு.

இறந்தவர்களை குறிக்கும் மரியாதைத் தலைப்பு

[தொகு]
  • தெய்வத்திரு:
  • அமரர்:

கல்விசார் மரியாதைத் தலைப்புகள்

[தொகு]
  • பண்டிதர்
  • புலவர்:
  • பெரும்புலவர்:
  • வித்துவான்:
  • பேராசிரியர்:
  • முனைவர்:

அரசியல் அல்லது பதவிசார் மரியாதைத் தலைப்புகள்

[தொகு]
  • நீதியரசர்
  • மாண்புமிகு, மேதகு அதிமேதகு - "அதி மேன்மை தகுந்த" என்பது இதன் விரிவு ஆகும். இதனை அந்நாட்டு சனாதிபதியை அழைக்க அவரின் பெயருக்கு முன்னால் இட்டு அழைப்பதுண்டு.
  • தமிழகத்தில் மாகராட்சியின் மேயர்கள் "வணக்கத்திற்குரிய" என்னும் மதிப்புச்சொல்லால் அழைக்கப்பட்டனர் தற்போதைய அரசாணையின் வாயிலாக மாண்புமிகு என்று அழைக்கப்பெறுகின்றனர்.[1]

அமைப்புகள் சார் மரியாதைத் தலைப்புகள்

[தொகு]
  • அரிமா: அரிமா அமைப்பின் உறுப்பினர்கள் தம்மைக் குறிப்பிடும் போது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-15. Retrieved 2015-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாதைத்_தலைப்பு&oldid=4202739" இலிருந்து மீள்விக்கப்பட்டது