உள்ளடக்கத்துக்குச் செல்

மரமல்லிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரமல்லிகை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
Carl Linnaeus the Younger
இனம்:
M. hortensis
இருசொற் பெயரீடு
Millingtonia hortensis
L.f.
வேறு பெயர்கள் [1]
  • Bignonia azedarachta König & Sims
  • Bignonia cicutaria K.D.Koenig ex Mart.
  • Bignonia hortensis (L.f.) Oken
  • Bignonia suberosa Roxb.
  • Millingtonia dubiosa Span.
  • Nevrilis suberosa Raf. nom. illeg.

மரமல்லிகை (Millingtonia hortensis, tree jasmine அல்லது Indian cork tree இதுவும் Millingtonia ஒரே இனங்கள்,[2]) என்பது ஒரு மரம் ஆகும். இது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தது. இது லடக் சாந்தனி மற்றும் புச் என்று மராத்தி மொழியிலும், ஆகாஷ் மல்லிகே (ಆಕಾಶ ಮಲ್ಲಿಗೆ) என்று கன்னடத்திலும், ஆகாச மல்லி அல்லது மர மல்லி என்று தமிழிலும், கவுகி என்று தெலுங்கு மொழியிலும், Angkear-Bos ( អង្គារ បុស្ស) என்று கெமெர் மொழியிலும், பிப் (ปีบ) என்று தாய் மொழி: ปีบ , கட்டேசமெ என மலையாளத்திலும், மினி சாமேலி மற்றும் ஆகாஷ் என்று இந்தியிலும், ஆகாஷ மல்லி (ଆକାଶ ମଲ୍ଲି) என்று ஒடியா மொழியிலும், சீதாஹார் என்று வங்காள மொழியிலும் அழைக்கப்படுகிறது.[3]

இதற்கான தாவரவியல் பெயரான மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் என்ற பெயரில் உள்ள, மில்லிங்டோனியா என்ற சொல்லானது சர் தாமஸ் மில்லிங்டனின் நினைவாக இடப்பட்டது. இவர் இந்த இனத்தை முதலில் விவரித்த கார்ல் லின்னேயஸ் தி யங்கருக்கு உத்வேகமாக இருந்தார் எனப்படுகிறது.[4] இதில் உள்ள 'ஹார்டென்சியா' என்ற சொல்லானது 'ஹார்டென்சிஸ்' மற்றும் 'ஹார்டஸ்' என்பதிலிருந்து உருவானது, இது லத்தீன் மொழியில் தோட்டத்துடன் தொடர்புடைய சொல்லாகும். அதை ஒத்த பெயரான பிக்னோனியா சுபரோசா, 'சுபெரோசா' என்பது லத்தீன் மொழியில் 'கார்க்கி' என்று பொருள்படும் 'சுபெரோஸ்' என்பதிலிருந்து உருவானது.[5]

இலக்னோவில் உள்ள மில்லிங்டோனியா அவென்யூவுக்கு மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் பெயரிடப்பட்டது.[6]

விளக்கம்

[தொகு]

இந்த மரமானது 18 முதல் 25 மீட்டர் உயரம் வரை உயரமாக வளர்கிறது. இதன் இலைகள் 7 முதல் 11 மீட்டர் வரை விரிகிறது. இந்த மரம் 6 முதல் 8 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகிறது, 40 ஆண்டுகள் வரை வாழ்கிறது. இது பல்வேறு மண் வகைகளிலும் தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடிய மரம். என்றாலும் ஈரமான தட்பவெப்பநிலையில் இது நன்கு வளரக்கூடியது.[5]

தண்டு

[தொகு]

இந்த மரம் பசுமையானதும், உயரமாக பிரமிடு போன்ற தண்டைக் கொண்டது. இந்த மரம் இள மஞ்சள்-வெள்ளை நிறம் கொண்டது. இந்த மரமானது வலுவான காற்றில் உடைபடக்கூடியது.[5]

இலை

[தொகு]

இதன் இலை வேம்பை ஒத்துள்ளது. இந்த இலைகளானது அச்செரோண்டியா ஸ்டைக்ஸ் மற்றும் ஹைபிலியா பியூரா ஆகியவற்றால் தாக்கப்பட வாய்ப்புள்ளது.[7]

மலர்

[தொகு]

இதன் மலர்களானது மலரடிச் செதில் தோற்றமில்லாதது. நீளமான 5 அடுக்கான வெண்மையான மணமுள்ள பல மலர்கள் உண்டாகும். இவை இருபால்சேர்க்கை மற்றும் இருபக்கச்சமச்சீர் கொண்டது. பூவானது மணி வடிவ புல்லிவட்டத்தில் ஐந்து சிறிய மடல்களைக் கொண்டிருக்கும். மலர் நான்கு பூந்துப்பைகளைக் கொண்டுள்ளது. இந்த குடும்பத்தின் பிற தாவரங்களைப் போலல்லாமல், பூந்துப்பைகள் வேறுபட்டவை. அல்லிவட்டமானது ஐந்து இதழ்கள் அடியில் இணைந்து நீண்ட குழல் வடிவானது.[2] குழல் 5 முதல் 7 செ. மீ. நீளமானது. மேலே ஐந்து அகவிதழ்கள் மடல் 2-2.5 செ.மீ. அகன்று விரிந்தது. மடல்கள் சமமில்லாதன. தெளிவற்ற இரு உதடுகள் போன்றன.

கனி மற்றும் விதை

[தொகு]

கனியானது நீண்ட மெலிந்த காப்சூலாக, தடுப்புச் சுவருக்கு இணையாக அமுங்கி இருக்கும். தடுப்புச் சுவர் வெடி கனி 2 வால்வுகள் மிகப் பல விதைகளை உடையது. இது தட்டையான அகன்ற கண்ணாடி போன்ற இறகு கொண்ட விதைகளைக் கொண்டுள்ளது.[2] இதன் விதைகள் பரவுவதற்கு ஏதுவாக பறவைகளால் இதன் பழங்கள் உண்ணப்படுகின்றன. இதை வளர்க்கும் விதமாக, பழம் பழுத்த உடனேயே விதைக்கப்படாவிட்டால் விதைகளின் முளைப்புத்திறண் குறைவாக இருக்கும், எனவே இத்தாவரமானது பொதுவாக வெட்டல் மூலம் நடப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

இந்த மரம் ஒரு அலங்கார மரமாக கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள பூக்களின் இனிய மணத்தால் தோட்ட மரமாக வளர்க்கப்படுகிறது. இந்த மரம் விறகிற்காகவும், இதன் பட்டைகள் தக்கைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.[8] இதன் இலைகள் சிகரெட்டில் புகையிலைக்கு மாற்றான மலிவான பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.[9]

வெவ்வேறு அம்சங்களின் காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  2. 2.0 2.1 2.2 Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  3. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  4. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  5. 5.0 5.1 5.2 Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  6. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  7. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  8. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  9. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரமல்லிகை&oldid=4202660" இலிருந்து மீள்விக்கப்பட்டது