மரகதாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
மரகதாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.
[தொகு]பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | India |
மாநிலம்: | Tamil Nadu |
மாவட்டம்: | Kallakurichi |
அமைவு: | Pasar |
ஆள்கூறுகள்: | 11°51′14″N 79°04′42″E / 11.853810624420518°N 79.07834803577461°E |
கோயில் தகவல்கள் | |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம் |
வரலாறு | |
அமைத்தவர்: | Bharadwaj Maharishi |
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாசாறு கிராமத்தில் சிறு மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது. இவ்வாலயம் தென் பெண்ணை ஆற்றின் தென் புறமாக பாசன ஆறு ஓடியதால், பாசாறு என பெயர் பெற்றது. இந்த ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கதொன்றாகும்.
வரலாறு
[தொகு]பரத்வாஜ மகரிஷியால் 6ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம், சோழ மன்னன் கரிகால சோழ வம்சத்தின் குலோத்துங்கன் புணர்திருப்பணி மூலம் மேம்படுத்தப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் நரையூர் கூற்றத்து பொன்பரப்பி வானகோவராயனால் இரண்டாம் திருப்பணி செய்யப்பட்டது. கல்வெட்டு சான்றுகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
தல சிறப்புகள்
[தொகு]- பிரம்மஹஸ்த்தி தோஷம் நீக்கும் வழிபாடு: புத்திசுவாதினம் இல்லாதவர்கள் பதினொறு சோமவாரங்களில் (திங்கட்கிழமை) கம்பீரு பழத்தை (எலுமிச்சை பழம்) தலையில் தேய்த்து, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஆலயத்தை 11 முறை வலம் வந்து இறைவனை வழிபட்டால் தோஷம் நீங்குவதாக ஐதீகம்.
- பஞ்சபூத அடிப்படை அமைப்பு:
* மேற்கு பகுதியில் குளம் (நீர்) * தெற்கு பகுதியில் வயல் சூழ்ந்த பகுதி (நிலம்) * வடக்குப் பகுதியில் அதிக காற்றோட்டம் (காற்று) * கிழக்கு பகுதியில் இறைவன் மீது தினமும் கூரிய ஒளிபடுவது ((நெருப்பு) * மலை மேல் அமைந்த ஆலயம் (ஆகாயம்)
- இறைவன் திருமேனி: சூரியகாந்த கல்லால் ஆன மிகப்பெரிய திருமேனி.
- தட்ஷ்ணமூர்த்தி: இசைக்கல்லால் உருவாக்கப்பட்ட திருமேனி.
- கல்வெட்டுச் சான்றுகள்: பரத்வாஜ மகரிசியின் சிற்பம், பசு இறைவன் திருமேனிக்கு பால் சொரிந்த சிற்பம், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர் ஆகியோரின் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன.
- ஆலயத்தைச் சுற்றி: மலை முழுவதும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
சமீபத்திய திருப்பணி
[தொகு]பல தலைமுறைகளாக வழிபாடின்றி சிதிலமடைந்த இவ்வாலயம், சிவ திரு தாமோதரன் ஐயா, திருவாரூர் சிவ திரு நடராஜன் சுவாமிகள் வழிகாட்டுதலின்படி 07.10.2018 அன்று முதல் உழவார பணியோடு வெள்ளி மற்றும் சகல அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. தொண்ட உழவார திருக்கூட்டம் & அறக்கட்டளை சார்பில் தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தின் மேம்பாடு
[தொகு]தற்போது திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆலய திருப்பணிக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்
[தொகு]பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பாசாறு கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் தென் பெண்ணை ஆற்றின் தென் புறமாக அமைந்துள்ளது, இதனால் பாசாறு என பெயர் பெற்றது. இதன் அருகில் ரிஷிவந்தியம் எனப்படும் இடம் உள்ளது, இது ரிஷிகள் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.
Category:Shiva temples in Tamil Nadu Category:Hindu temples in Kallakurichi district Category:6th-century Hindu temples