உள்ளடக்கத்துக்குச் செல்

மய்முன் திஸ் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைமுன் திஸ் முற்றுகை (siege of Maymun-Diz) என்பது 1256ஆம் ஆண்டு நிசாரிகளுக்கு எதிரான, குலாகுவால் தலைமை தாங்கப்பட்ட மங்கோலியப் படையெடுப்பின் போது நடத்தப்பட்ட ஒரு முற்றுகையாகும். மைமுன் திஸ் என்பது நிசாரி இசுமாயிலிகளின் அரசின் தலைவரான இமாம் ருக்னல்தீன் குர்ஷாவின் கோட்டையாகவும், வலுவூட்டல் பகுதியாகவும் இருந்தது.

இவர்களது வலுவூட்டல் பகுதியை நோக்கி குலாகு முன்னேறிய போது புதிய நிசாரி இமாம் ஏற்கனவே குலாகுவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். அனைத்து நிசாரி கோட்டைகளையும் இடிக்குமாறு மங்கோலியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், மங்கோலியர்களை இணங்க வைக்க இமாம் முயற்சி செய்தார். பல நாட்கள் சண்டைக்குப் பிறகு இமாமும், அவரது குடும்பமும் அடி பணிந்தது. இவர்கள் குலாகுவால் நல்ல முறையில் வரவேற்கப்பட்டனர். மைமுன் திஸ் கோட்டையானது அழிக்கப்பட்டது. தன்னுடைய ஆதரவாளர்களை சரணடைய செய்யவும், இதே போல் அவர்களுடைய கோட்டைகளையும் அழிக்கவும் இமாம் ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து பெயரளவில் வலிமையான பகுதியாக இருந்த அலமுத் கோட்டையும் அடி பணிந்தது. பாரசீகத்தில் நிசாரி அரசின் முடிவை குறித்ததாக இது அமைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biran, Michal; Brack, Jonathan; Fiaschetti, Francesca (2020). Along the Silk Roads in Mongol Eurasia: Generals, Merchants, and Intellectuals (in ஆங்கிலம்). Univ of California Press. p. 30-31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-29875-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மய்முன்_திஸ்_முற்றுகை&oldid=3776497" இலிருந்து மீள்விக்கப்பட்டது