உள்ளடக்கத்துக்குச் செல்

மயூராசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூர் என்றால் வடமொழியில் மயில் என்று பொருள். இந்த ஆசனத்தின் உச்ச நிலை மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது[1][2][3]

செய்முறை

[தொகு]

மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.

பலன்கள்

[தொகு]

வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yoga Journal - Peacock Pose". பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
  2. "Mayurasana - AshtangaYoga.info". பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
  3. Sinha, S. C. (1 June 1996). Dictionary of Philosophy. Anmol Publications. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-293-9. பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூராசனம்&oldid=4101718" இலிருந்து மீள்விக்கப்பட்டது