உள்ளடக்கத்துக்குச் செல்

மயக்கவியல் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாள் நினைவுகூரப்படுகிறது.

1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் (William D.G. Morton)என்பவர் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இதனைப் பரிசோதித்தார். வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Anaesthesia Day is a day to support change". Archived from the original on 2017-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயக்கவியல்_நாள்&oldid=4048365" இலிருந்து மீள்விக்கப்பட்டது