மன்னான்
Appearance
மன்னான் இனப் பழங்குடியினர் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த கொடைக்கானல் மலைப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் பாண்டிய நாட்டுக் கலவரத்தின் போது இங்கு இடம் பெயர்ந்ததாகக் கூறுவர். இவர்கள் தமிழ் கலந்த கிளை மொழியை பேசுகின்றனர். இவர்கள் தங்களுடைய தெய்வமாக மீனாட்சியை வணங்குகின்றனர். இவர்கள் மார்கழி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக கொள்கின்றனர்.