மனோகர் ராய் சர்தேசாய்
முனைவர் மனோகர் ராய் சர்தேசாய் (ஆங்கிலம் : Dr. Manohar Rai Sardesai) (பிறப்பு: 18 ஜனவரி 1925 - இறப்பு: 22 ஜூன் 2006) இவர் இந்தியாவின் கோவாவிலிருந்து வந்த ஒரு கொங்கனி கவிஞரும், எழுத்தாளரும் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரும் ஆவார். [1] சோர்போன் பல்கலைக்கழகத்தில் "எல்மேஜ் டி எல்இண்டே என் பிரான்ஸ்" என்ற தனது ஆய்வறிக்கைக்காக அவர் தனது டாக்டராட் லெட்டர்ஸ் ஃபிரான்சைஸைப் பெற்றார் . நவீன கொங்கனி கவிதைகளின் எழுச்சிக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். சர்தேசாய் 2006 இல் இறந்தார். [2]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]மனோகர் ராய் சர்தேசாய் 1825 ஜனவரி 18 அன்று பிறந்தார். 1942 இல் அவர் மார்கோவாவிலுள்ள பாடிகர் மாதிரி உயர்நிலைப் பள்ளியில் அவரது மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் தேர்ச்சியடைந்தார் . [3] அவர் 1947 இல் மும்பைய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்து முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். அவர் தனது முதுகலையிலும் முதலிடம் பிடித்து வெற்றிகரமாக முடித்தார். 1949 இல் அதே பல்கலைக்கழகத்தில் பிரஞ்சு மற்றும் மராத்தியிலும் முதலிடம் பிடித்தார். [1] அவர் 1958 ஆம் ஆண்டில் பாரிஸின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் தனது டாக்டரேட் லெட்டர்ஸ் ஃபிரான்சைஸைப் பெற்றார். கோவா பல்கலைக்கழகத்திலும், மும்பை பல்கலைக்கழகத்திலும், மும்பாயில் உள்ள பல கல்லூரிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பித்தார்.
அவர் பிரபல சிறுகதை எழுத்தாளர் லட்சுமணராவ் சர்தேசாயின் மகனாவார். புத்தகங்களால் சூழப்பட்ட அவர் சிறு வயதிலேயே எழுதத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. அவருள் நேரடியாக ஊடுருவிய கொங்கனி கவிதைகளுக்காகவும் அறியப்பட்டார். சர்தேசாய் பனாஜி, அகில இந்திய வானொலியிலும், கோவா மற்றும் மும்பை மற்றும் புனேயில் தூர்தர்ஷனிலும் பாடல்கள், கவிதைகள், பேச்சுக்கள், நாடகங்கள் போன்ற பல அம்சங்களை ஒளிபரப்பினார். ஐரோப்பா மற்றும் இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர் கொங்கனி, ஆங்கிலம், பிரஞ்சு, போர்த்துகீசியம் மற்றும் மராத்தி மொழிகளில் எழுதினார்.
கவிதைகள்
[தொகு]சர்தேசாய் கொங்கனியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாகித்திய அகாடமி நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் இந்திய தேசிய புத்தக அறக்கட்டளைக்காகவும் எழுதினார். அவரது கவிதைகளின் குறிப்பிடத்தக்க தொகுப்புகள் அய்ஜ் ரீ தாலோர் போட்லி போடி (1961), கோமா துஜியா மொககாதிர் (1964), ஜெயத் ஜேஜ் (1964), ஜெய் புன்னியாபுய், ஜெய் பாரத் (1965), பெபியாச்செம் கசார் (1965), ஜெயோ ஜூயோ (1970) மற்றும் பிசோலிம் (1979) போன்றவையாகும். [1] தில்லியின் சாகித்திய அகாதமிக்கு கவிதைகளின் தொகுப்பையும் வெளியிட்ட அவர் உரைநடை, நாடகம் மற்றும் குழந்தைகள் இலக்கியத்தின் பல படைப்புகளை வெளியிட்டார்.
மொழிபெயர்ப்பு
[தொகு]பிரெஞ்சு மொழியில் இருந்து கொங்கனியில் பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். 1994 இல் ரோமெய்ன் ரோலண்ட் எழுதிய "லா வை டி விவேகானந்தா" (விவேகானந்தா) மற்றும் 2000 ஆம் ஆண்டில் இழான்-பவுல் சார்த்தர் எழுதிய "லெஸ் மோட்ஸ்" ("உத்ரம்") ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் அவரது சில படைப்புகளை உள்ளடக்கியது. 2004 ஆம் ஆண்டில் கொங்கனி-ஆங்கில அகராதியையும் தயாரித்தார். 1999 இல் கோவா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட நான்கு தொகுதிகளான கொங்கனி என்சைக்ளோபீடியாவின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.
விருதுகள் மற்றும் மரியாதைகள்
[தொகு]பிரெஞ்சு மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 1988 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம் அவருக்கு " செவாலியே விருதை வழங்கியது. டாக்டர் சர்தேசாய் தனது இலக்கிய பங்களிப்புகளுக்காகவும் கற்பித்தல் தொழிலிலும் பல விருதுகளை வென்றுள்ளார். விருதுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை பிசொல்லிம் என்ற படைப்பிற்கான சாகித்திய அகாதமி விருது ஆகும். [1]
1962 மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோவாவின் மார்கோவில் நடைபெற்ற அகில இந்திய கொங்கனி பரிஷத்தின் 8 வது அமர்வுக்கு அவர் தலைமை தாங்கினார் - 1961 டிசம்பர் 19, அன்று போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுவிக்கப்பட்ட பின்னர் நடைபெறுவது இது முதல் முறையாகும். [4] [1] பின்னர் கோவாவின் கொங்கனி பாஷா மண்டலத்தின் தலைவராக இருந்துள்ளார்.
அவர் "அலையன்ஸ் ஃபிராங்காயிஸ் டி கோவா" இன் வாழ்க்கை உறுப்பினராகவும், கோவாவின் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்துள்ளர். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "meet the author: ManoharRai SarDesai" (PDF). Sahitya Akademi. 28 December 1993. Archived from the original (PDF) on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ "Manoharrai Sardesai's French Connection". The Navhind Times. Archived from the original on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ "SCHOOL HISTORY – Bhatikar Model High School". Archived from the original on 26 April 2018. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ Souvenir of 28th Session of the All India Konkani Parishad, Goa, 2012