மனோகர் தாசு
Appearance
மனோகர் தாசு (Manohar Das) 1582-1624 ஆம் ஆண்டுகள் காலத்தில் முகலாயர் பாணியில் ஓவியம் தீட்டிய ஓர் இந்து ஓவியர் ஆவார். மனோகர் அல்லது மனுகர் என்ற பெயராலும் இவர் அறியப்பட்டார்.
மனோகரின் தந்தை பசவன், மனோகர் வளர்ந்த முகலாயப் பேரரசரின் அரசவையில் தலைமை ஓவியராக இருந்தார். தந்தை இவருக்கு ஓவியக்கலையை பற்றி இவருக்கு அறிவுறுத்தியிருக்கலாம், பின்னர் மனோகர் அரசவை ஓவியராகவும் ஆனார். இவரது ஆரம்பகால படைப்புகள் அக்பருக்காக வரையப்பட்டன, பின்னர் இவர் அக்பரின் மகனும் வாரிசுமான சகாங்கீருக்காக வரைந்தார், மனோகரின் படைப்புகள் அரச குடும்பங்களையும் அரசவை வாழ்க்கையையும் பெரும்பாலும் சித்தரித்தன. மனோகர் தாசின் சில படைப்புகளை பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்டு அருங்காட்சியகங்களில் காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Museum, Victoria and Albert. "Mirza Ghazi Manohar V&A Explore The Collections". Victoria and Albert Museum: Explore the Collections (in ஆங்கிலம்).
மேலும் படிக்க
[தொகு]- Kossak, Steven (1997). Indian court painting, 16th-19th century]. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0870997831. (see index: p. 148-152; plate 13)
- The Emperors' album: images of Mughal India, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Manohar Das