உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்
Madhya Pradesh State Commission for Women
ஆணையம் மேலோட்டம்
அமைப்பு1998 (மாநில மகளிர் ஆணையச் சட்டம் 1995)
ஆட்சி எல்லைமத்தியப் பிரதேச அரசு
தலைமையகம்மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம், 35, இராசீவ் காந்தி பவனம், காந்த்-2, முதல் தளம், சியாமளா மலை, போபால் - 462002.[1][2]
ஆணையம் தலைமை
  • சோபா ஓசா, தலைவி
வலைத்தளம்Official Website அதிகாரப்பூர்வ இணையதளம்

மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் (Madhya Pradesh State Commission For Women) என்பது மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். மாநிலத்தில் பெண்கள் நலனுக்கான இந்த ஆணையம் மத்தியப் பிரதேச அரசால் பகுதி நீதித்துறை அமைப்பாக நிறுவப்பட்டது.

வரலாறு மற்றும் குறிக்கோள்கள்

[தொகு]

பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும், மாநிலத்திலிருந்து பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை அறிந்துகொள்வதற்காகவும் மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்டது. குடும்பம் மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் தேவையான அதிகாரங்களை இந்த ஆணையம் கொண்டுள்ளது.

மகளிர் ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது:

  • பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தல்.
  • சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்லது வாய்ப்பு மறுப்பு அல்லது பெண்களுக்கு ஏதேனும் உரிமைகளைப் பறிக்கும் பட்சத்தில் சரியான நேரத்தில் தலையீடு மூலம் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாளுதல்
  • பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுக்குப் பரிந்துரை வழங்குதல்.
  • மாநிலத்தில் பெண்கள் அடிப்படையிலான சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்[3]

அமைப்பு

[தொகு]

மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் தலைவர் ஒருவரின் கீழ் உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது. இவர்களின் சம்பளம் மற்றும் இதர ஊதியங்கள் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்டு அவ்வப்போது திருத்தப்பட்டு வருகின்றன.

சோபா ஓசா மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.[4][5] இவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

செயல்பாடுகள்

[தொகு]

மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் கீழ்kகண்ட செயல்பாடுகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்[6]
  • மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லல்
  • மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.
  • பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மகளிரின் உரிமைகள் மீறல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்கள் உள்ள பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகித் தீர்வு காணல்
  • மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி.
  • பெண்களின் வெகுஜனக் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் இது தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்குச் செய்தல்.
  • பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள எந்த வளாகம், சிறை அல்லது பிற தடுப்பு இல்லம் அல்லது வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருதல்.
  • ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரித்தலும் ஆய்வு செய்தலும்
  • கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஏதேனும் ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும்.
  • பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது இது தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் வந்தால் புகார்களை விசாரிக்க.

மேலும் காண்க

[தொகு]

தேசிய மகளிர் ஆணையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madhya Pradesh Women Commission". Madhya Pradesh Women Commission. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  2. "Madhya Pradesh Women Commission". Madhya Pradesh Women Commission. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  3. "In a first, women’s commission to come out with ads". hindustantimes.com. 6 August 2013. https://www.hindustantimes.com/bhopal/in-a-first-women-s-commission-to-come-out-with-ads/story-0TcZ3911Luispe1wMmRI4N.html. 
  4. "Over 12,000 cases pending before MP commission for women, says chairperson Shobha Oza". freepressjournal. 18 March 2021. https://www.freepressjournal.in/bhopal/over-12000-cases-pending-before-mp-commission-for-women-says-chairperson-shobha-oza. 
  5. "Congress leader Shobha Oza named chairperson of MP Women's Commission". aninews.in. 16 March 2020. https://www.aninews.in/news/national/general-news/congress-leader-shobha-oza-named-chairperson-of-mp-womens-commission20200316224548/. 
  6. "Madhya Pradesh Women Commission". Madhya Pradesh Women Commission. Archived from the original on 13 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]