மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு
மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு (BRTS) | |
---|---|
தகவல் | |
அமைவிடம் | மதுரை, இந்தியா |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 2 |
இயக்கம் | |
இயக்குனர்(கள்) | மதுரை மாநகராட்சி |
மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு (Madurai Bus Rapid Transit System, (BRTS)) என்பது, மதுரை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மாநகராட்சியினரால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
அறிவிப்புகள்
[தொகு]2009ம் ஆண்டு, ஜவகர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.600 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்தினை மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதில் முக்கிய திட்டமான, பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பை மேற்கோள் காட்டினர். 6 வழிச்சாலையான இத்திட்டத்தில், நடுவிலுள்ள 2 வழி நகர பேருந்துகளுக்காகவும், அடுத்த 2 வழி பிற வாகனங்களுக்காகவும், கடைசி 2 வழி, அணுகுசாலைக்காக என திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் தெரிவு செய்து பரிந்துரைக்கு அனுப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தினால் அரசரடியையும் தேனி நெடுஞ்சாலையையும் இணைக்கும் பாலம் ஒன்று கோரிப்பாளைய சாலை சந்திப்பில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வழித்தடங்கள்
[தொகு]மாநகரின் இரு பெரும் வழித்தடங்களை தெரிவு செய்து பரிந்துரைக்கு அனுப்பட்டுள்ளது.[1]
தடம் 1: பாத்திமா கல்லூரி — பழங்காநத்தம் சாலை சந்திப்பு [வழி: திண்டுக்கல் பைபாஸ் சாலை]
தடம் 2: காமராசர் பாலம் — விரகனூர் சுற்றுச்சாலை [வழி: வைகை வடக்குக் கரையோரம்]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-07. Retrieved 2013-08-21.