உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை கூடலூர் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை கூடலூர் கிழார் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிகக் குறிப்பிடத்தக்க நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். இவர் சங்கப்புலவர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தவர் என கருதப்படுகிறது. எட்டுத் தொகையுள் ஒன்றான ஐங்குறுநூறு தொகுத்தோர் இவரே எனப்படுகிறது.[1] சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. விக்கிமூலம், முதுமொழிக்காஞ்சி, 1919, பதிப்புரை
  2. "Muthumozhi Kanchi". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_கூடலூர்_கிழார்&oldid=4120510" இலிருந்து மீள்விக்கப்பட்டது