உள்ளடக்கத்துக்குச் செல்

மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்ஸபா மகா வித்தியாலயம்
அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் இலச்சினை
மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயத்தின் சின்னம்
அமைவிடம்
மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகமை, இலங்கை
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி அரசு-உதவி பெறும் பள்ளி
தொடக்கம்1973.01.13
பள்ளி மாவட்டம்மாத்தறை மாவட்டம்
கல்வி ஆணையம்இலங்கை கல்வி அமைச்சு
அதிபர்எம்.எஸ்.எம். ஹிப்ளர்
தரங்கள்1 முதல் 13 வரை
கல்வி முறை1 C

அஸ்ஸபா மகா வித்தியாலயம் (Assafa Maha Vidyalaya, අස්සෆා මහා විද්‍යාලය) இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகமை மதுராப்புர என்ற இடத்தில் அமைந்துள்ள இசுலாமியப் பாடசாலையாகும்.[1]

வரலாறு

[தொகு]

ஆசிரியர்கள் த.சா. அப்துல் லத்தீப், எம். பீ. எம். ஸஹீத், ஆயுர்வேத மருத்துவர் பீ. எம். அப்துல் கரீம், எம். ஐ. எம். ஹபீள், எம். சீ. அபூதாஹிர் ஆகியோரின் அயராத உழைப்பினாலேயே இப்பாடசாலை இவ்வூரில் அமைந்தது. இதற்காக மருத்துவர் அப்துல் கரீம் தனது சொந்தக் காணியை அன்பளிப்புச் செய்தார்.

1973 சனவரி 13 ஆம் நாள் கல்வியமைச்சின் பிரதிநிதியாக, பிரதிக் கல்வியமைச்சராகவிருந்த பீ. வை. துடாவை, கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ. எச். எம். எம். வெபா ஆகியோர் அதிகாரபூர்வமாக இப்பாடசாலையைத் திறந்து வைத்தனர். அஸ்ஸபா வித்தியாலயத்தின் முதலாவது தலைமையாசிரியாராக எஸ். ஏ. எம். மௌலானா பதவியேற்றார்.

1990 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து முதன் முதலாக மாணவர்கள் க.பொ.த. சா.த. பரீட்சைக்குத் தோற்றினர். 1998 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து வெள்ளி விழாவின் போது 'மதுரம்' சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

2020 பெப்பிரவரி மாதம் 20 ஆம் நாள் குவைத்து அரசாங்கத்தின் சர்வதேச தொண்டர் நிறுவனத்தினால் இரு மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

2022 ஆனி மாதம் 30 ஆம் நாள் வியாழக்கிழமை, இலங்கைக்கான குவைத்துத் தூதுவர் கலப் பூ தார் அவர்கள், அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் இரு மாடிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.அந்நிகழ்வின்போது 'மதுரம்' நினைவு மலர் வெளியிடப்பட்டது.

மகா வித்தியாலயமாகத் தரமுயர்வு

[தொகு]

2021 நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 1 'ஸீ' மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டதை அறிவித்து தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 2021 திசம்பர் மாதம் 01 ஆம் திகதி இப்பாடசாலையில் க.பொ.த. உயர்தரக் கலைப் பிரிவு வகுப்பு முறைப்படி தொடங்கப்பட்டது.

அஸ்ஸபா மகா வித்தியாலயத்திற்கான புதிய இலச்சினை கலைமகன் பைரூஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

கோலாகலமாக நடைபெற்ற அஸ்ஸபா பொன்விழா

அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வுகள் (Golden Jubilee) தொடர்ந்தேர்ச்சியாக நான்கு நாட்கள் (2023 மார்கழி மாதம் 20 - 24 வரை) மிகச் சிறப்பாக நடந்தேறின. நிகழ்வில் பழைய மாணவர்கள், கடமை புரிந்த ஆசிரியப் பெருந்தகைகள், தலைமையாசிரியர்கள், பிரதம அதிதிகள் எனப் பலதரப்பினரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் பாடசாலையின் வரலாறு மற்றும் சான்றோரின் ஆக்கங்கள் அடங்கிய காத்திரமான 'மதுரம் 50' நூலும் வௌியிட்டு வைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிபர் உயர்திரு. எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்கள் தான் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார். தான் பதவி விலகினாலும் பாடசாலைச் சமூகத்தினரின் வேண்டுகோளினால் மீண்டும் ஆறு மாதங்கள் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலை அதிபராகக் கடமையேற்று 2025.02.06 ஆம் திகதி ஓய்வு பெற்றார். இந்நிகழ்வு வரலாற்றில் என்றும் மறக்கவியலாத நிகழ்வாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சேவை புரிந்த அதிபர்கள்

[தொகு]
  • எஸ்.ஏ. மக்பூல் மௌலானா (Makbool Moulana) 1973 - 1980
  • எம்.ஐ.எம். ஹபீள் (Hafeel) 1980.10.14 - 1999.12.22
  • மௌலவி எம்.எம். உஸைர் (Uzair)
  • எம். புனானி (Bunani)
  • எம். எச். முஹம்மத் (Muhammed)
  • எம்.எம். இஹ்ஸான் (Ihsan)
  • ஏ.எச்.எம். யூசுபு (Yoosubu)
  • எம்.எஸ்.எம். இர்பான் (Irfan)
  • எம்.எஸ்.எம். ஹிப்ளர் (Hiflar) (2014.09... - 2025.02.06)
  • எம்.லிகாஉர் ரஹ்மான்
  • எம்.எஸ்.எம். ஹிப்ளர் (Hiflar) (2014.09... - 2025.02.06)
  • அஷ்-ஷெய்க் ஜே.எம் நுபைல் (நளீமி) (Ash-Sheikh J.M. Nufail Naleemi)

பாடசாலைப் பண்

[தொகு]

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

கலைஜோதி நிலா எனவே
கறை நீங்கி அருள்மிகவே - இறைவா
நிலை மேவிய பண்புகளே
நிறைவாக்கிடுவாய் இறைவா!

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

உயர்தெங்கு வளம் தருமே
ஒளிசேர் மதுராபுரமே - இறைவா
அஸ்ஸபா எங்கள் அறிவகமே
அணிசேர்த்திடுவாய் இறைவா!

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

அறிவின் கடலாய்த் திகழ்ந்தார்
அருமேதை கஸ்ஸாலி இமாம் -இறைவா
அதிலோர் துளியைத்தானும்
அடைந்தோங்க அருள் இறைவா!

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகள்". Archived from the original on 2016-06-01. Retrieved 29 சூன் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]