மதிசுதா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மதிசுதா | |
---|---|
பிறப்பு | மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன் 8 மார்ச்சு 1985 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | நடிகர், இயக்குநர் |
மதிசுதா (பிறப்பு: மார்ச் 8, 1985) இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன் ஆகும்.
இளமைக்காலமும் கல்வியும்[தொகு]
தொடக்கக்கல்வியை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் கற்றார். போரின் நடுவே இடம்பெயர்வுகளால் 7 பாடசாலைகளில் படித்து, மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தையும் பின்னர் IHS இல் உதவி மருத்துவர் கற்கையையும் கற்றிருக்கிறார்.
உயர்தரம் படிக்கும் காலத்திலேயே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதி அறியப்பட்ட இவர் 2009 இன் பின்னர் வலைப்பதிவாளராகவும் அறியப்பட்டிருந்தார்.
திரைத்துறை அடைவுகள்[தொகு]
ஆவணப்பட உருவாக்கத்திற்கான உயர் பட்டயக் கற்கையினை முடித்திருககிறார் 12 குறும்படங்கள், 5 ஆவணப்படங்கள், ஒரு பாடல் என்பவற்றை இயக்கியதுடன் 25 குறும்படத்துக்கு மேல் நடித்தும் உள்ளார்.
இதுவரை இவர் இயக்கிய/நடித்த குறும்படங்கள்[தொகு]
ஆண்டு | தலைப்பு | பங்களிப்பு |
---|---|---|
2012 | ரொக்கட் ராஜா | இயக்குனர் |
2013 | துலைக்கோ போறியள் | இயக்குனர் |
2013 | மிச்சக்காசு | இயக்குனர், நடிகர் |
2013 | தாத்தா | இயக்குனர் |
2014 | தொடரி | இயக்குனர் |
2014 | தழும்பு | இயக்குனர் |
2014 | கொண்டோடி | இயக்குனர் |
2015 | கருவறைத் தோழன் | இயக்குனர் |
2016 | பந்து | இயக்குனர் |
2016 | பாதுகை | இயக்குனர் |
2017 | The house wife | இயக்குனர் |
இதுவரை இயக்கிய/நடித்த முழுநீளப் படங்கள்[தொகு]
ஆண்டு | தலைப்பு | பங்களிப்பு |
---|---|---|
2016 | மனசுக்குள் ஒரு மழைச்சாரல் | நடிகர் |
2017 | உம்மாண்டி | இயக்குனர், நடிகர் |
விருதுகளும் பாராட்டும்[தொகு]
சிறந்த நடிகருக்கான விருது[தொகு]
- Canadian tamil film festival (தழும்பு) - 2015
- Navalar fil festival - france (கருவறைத் தோழன்) - 2016
- Adsaram film festival (போலி) - 2015
- Thrivenor talkies film festival (போலி) - 2015
சிறந்த இயக்குனர் விருது[தொகு]
- Balumahendra film festival – 2014 (துலைக்கோ போறியள்)
- Balumahendra film festival - 2015 (தாத்தா)
சிறந்த திரைக்கதைக்கான விருது[தொகு]
- vimbam film festival london – 2017 (பாதுகை)
- ilamai fm film festival – 2014 (மிச்சக்காசு)
- AAA international film fesival – 2014 (மிச்சக்காசு)
சிறந்த கலை இயக்குனர்[தொகு]
- Navalar film festival - france (கருவறைத் தோழன்)
சிறப்பு நடுவர் விருது[தொகு]
- London international film festival (2015) (தாத்தா)
- Olikkeetru festival france (2014) (சுவர் தேடும் சித்திரம் பாடல்)
சிறந்த படத்துக்கான விருது[தொகு]
- Balumahendra film festival – 2015 (தாத்தா)
- Vimbam festival london – 2016 (பந்து)
http://www.kuviyam.lk/tag/mathi-sutha/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Actor Mathi Sutha, Latest News, Photos, Videos on Actor Mathi Sutha | Actor - Cineulagam". Actor Mathi Sutha, Latest News, Photos, Videos on Actor Mathi Sutha | Actor - Cineulagam. Archived from the original on 2017-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.