உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டல அறிவியல் மையம், கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவை மண்டல அறிவியல் மையம் (Regional Science Centre, Coimbatore) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் தேதி தொடங்கப்பட்டது.[1] [2] தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் தீவிர ஆதரவுடன் தேசிய அறிவியல் அருங்காட்சியகக் குழுவால் இம்மையம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் மண்டல அறிவியல் மையம், தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. [3]

வசதிகள்

[தொகு]

4000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த அறிவியல் மையத்தில் மூன்று நிரந்தர காட்சிக்கூடங்களும் ஒரு தற்காலிக கண்காட்சி அரங்கமும் உள்ளன. முப்பரிமாண திரைப்படக் காட்சி வசதி, கோளரங்கம், குளிரூட்டப்பட்ட மண்டபம், ஒளி-ஒலி சாதனங்கள், அறிவியல் விளக்க மூலை, குழந்தைகள் செயல்பாட்டு மூலை, நூலகம், வானத்தை கண்காணிப்பதற்கான தொலைநோக்கி மற்றும் பிற பொது வசதிகள் பலவும் இங்கு உள்ளன.

நடவடிக்கைகள்

[தொகு]

அறிவியல் பற்றிய சந்தேகங்களை விளக்கி கூறுவதற்காக அறிவியல் அறிஞர்களை சந்தித்தல், மருத்துவ நிபுணர்களை சந்தித்தல், அறிவியலை செயல்முறைகள் மூலமாக விளக்கிக் கூறுதல், இரவு வான் நோக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிறுகோளரங்கம் மூலமாக வான் அறிவியல் பற்றிய அறிவியல் சந்தேகங்கள் விளக்கப்படுகின்றன.

விடுமுறை நாட்கள்

[தொகு]

அனைத்து வார நாட்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் (362 வேலை நாட்கள்) குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகும்.

வேலை நேரம்

[தொகு]

காலை 10.00 மணி முதல் மாலை 05.45. மணி வரை இயங்குகிறது.

நுழைவுக் கட்டணம்

[தொகு]

அறிவியல் மையம், முப்பரிமாண காட்சிக்கூடம், சிறுகோளரங்கம் பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு முறையே ரூபாய் 55,45.
அறிவியல் மையம், சிறுகோளரங்கம் பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு முறையே ரூபாய் 45,35
அறிவியல் மையம், முப்பரிமாண காட்சிக்கூடம் பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு முறையே ரூபாய் 35,25
அறிவியல் மையம் மட்டும் (நுழைவுக் கட்டணம்) பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு முறையே ரூபாய் 25,15

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கோவை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/education/936129-coimbatore-robotics-training-camp-organized-by-science-and-technology-centre.html. பார்த்த நாள்: 21 June 2024. 
  2. "மண்டல அறிவியல் மையத்தில் கோடைகால அறிவியல் முகாம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2024/Apr/23/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: 21 June 2024. 
  3. "Regional Science Centre handed over to State Government", The Hindu (in Indian English), 2013-07-14, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-06-21