உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டகத்தே பறவைகள் சரணாலயம்

ஆள்கூறுகள்: 13°44′26″N 75°27′37″E / 13.74056°N 75.46028°E / 13.74056; 75.46028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டகத்தே பறவைகள் சரணாலயம்
Mandagadde Bird Sanctuary
ಮಂಡಗದ್ದೆ ಪಕ್ಷಿಧಾಮ
கிராமம்
மண்டகத்தே பறவைகள் சரணாலயம் Mandagadde Bird Sanctuary ಮಂಡಗದ್ದೆ ಪಕ್ಷಿಧಾಮ is located in கருநாடகம்
மண்டகத்தே பறவைகள் சரணாலயம் Mandagadde Bird Sanctuary ಮಂಡಗದ್ದೆ ಪಕ್ಷಿಧಾಮ
மண்டகத்தே பறவைகள் சரணாலயம்
Mandagadde Bird Sanctuary
ಮಂಡಗದ್ದೆ ಪಕ್ಷಿಧಾಮ
ஆள்கூறுகள்: 13°44′26″N 75°27′37″E / 13.74056°N 75.46028°E / 13.74056; 75.46028
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிமோகா மாவட்டம்
தாலுக்காதீர்த்தகல்லி
பரப்பளவு
 • மொத்தம்0.0046 km2 (0.0018 sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மண்டகத்தே பறவைகள் சரணாலயம் (Mandagadde Bird Sanctuary) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிமோகா நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மண்டகத்தே கிராமத்திற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளது. 1.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளாலும் துங்கா நதியாலும் சூழப்பட்டுள்ளது. சிமோகாவிலிருந்து தீர்த்தல்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் சரணாலயம் உள்ளதால் இங்கு எளிதில் சென்றடைய முடியும். வற்றாத துங்கா நதியால் சூழப்பட்ட தீவு என்பதால், இந்த இடத்திற்கு புலம்பெயர்ந்த பறவைகள் வந்து அடைகாக்கும்.

சரணாலயம்

[தொகு]

நாட்டிலுள்ள 20 முக்கியமான சரணாலயங்களில் ஒன்றான மண்டகத்தே சரணாலயம் சூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பறவைகளை அதிக அளவில் ஈர்க்கிறது. சூலை முதல் செப்டம்பர் வரை, ஆகத்து மாதத்தின் உச்ச பருவத்தில், பல வகையான பறவைகள் சரணாலயம் உள்ள இத்தீவில் முட்டையிடுகின்றன. பருவமழையின் போது துங்கா நதியில் தீவு ஓரளவு மூழ்கும் என்பதால் பறவைகள் கூடு கட்ட மரங்களின் மேல் கிளைகளை விரும்புகின்றன.

பருவ காலத்திதில் 5,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பறவைகள் கூடு கட்டுவதற்கு இந்த சரணாலயம் ஒரு முக்கியமான இடமாகும். வினோதமான இச்சிறிய தீவில் கொக்கு, கரும்புள்ளி மீன்கொத்தி, வெண் கழுத்து நாரை, இராக் கொக்கு, அகலவாய் நாரை போன்ற பல்வேறு வகை பறவைகள் இங்கு காணப்படுகின்றன.[1] பல்வேறு வகையான பறவைகளை பார்வையிட கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடு கட்டும் பறவைகளை நெருக்கமாகப் பார்க்க இங்கு படகு சவாரியும் செய்யலாம்.[2]

பறவைகள்

[தொகு]
நீர் பறவைகள், மண்டகத்தே தீவு, சிமோகா, இந்தியா

பருவ காலத்தில் மூன்று வகையான புலம்பெயர்ந்த பறவைகள் சரணாலயத்தின் பசுமையான சுற்றுப்புறங்களுக்கு கூட்டமாக வந்து டிசம்பர் மாதம் வரை இருக்கின்றன.[3]

ஆகத்து மாதம் நிலவும் உச்ச பருவத்தில், 5,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4]

பெரிய பறவை

மண்டகத்தேக்கு சிமோகாவிலிருந்து 30 கிலோமீட்டரும் மங்களூரிலிருந்து 140 கிலோமீட்டரும் பெங்களூரில் இருந்து 345 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madur (14 May 2017). "Mandagadde Bird Sanctuary – The little island of Mandagadde". Karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
  2. "Mandagadde Bird Sanctuary, Shimoga District, Karnataka". Incredible South India. Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  3. Mellegatti, Pramod (9 July 2009). "Mandagadde sanctuary plays host to special guests". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Mandagadde-sanctuary-plays-host-to-special-guests/article16551205.ece. பார்த்த நாள்: 10 December 2019. Mellegatti, Pramod (9 July 2009). "Mandagadde sanctuary plays host to special guests". The Hindu. Retrieved 10 December 2019.
  4. 4.0 4.1 "Mandagadde Bird Sanctuary". தி இந்து. 22 May 2006. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/mandagadde-bird-sanctuary/article3193024.ece. 

புற இணைப்புகள்

[தொகு]