மணி பாப்பா (இதழ்)
Appearance
மணி பாப்பா 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் முல்லை தங்கராசன் ஆவார். இது படங்களுடன் வண்ணப் பக்கங்களில், சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, கவிதை, துணுக்கு, செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.