உள்ளடக்கத்துக்குச் செல்

மணப்புள்ளிக்காவு வேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணப்புள்ளிக்காவு கோயில்

மணப்புள்ளிகாவு என்பது இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு நகரில் அமைந்துள்ள அன்னை தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மணப்புள்ளிக்காவு எனப்படுகின்ற ஒரு இந்து ஆலயமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற திருவிழா மணப்புள்ளிகாவு வேளா என்று அழைக்கப்படுகிறது. 8 தொகுப்புக்குழுவினரால் இது நடத்தப்படுகிறது. இவ்விழாவின் சிறப்பம்சமாகக் கருதப்படுபவை யானைகளும், வாணவேடிக்கைகளும் ஆகும். [1]

புராணம்[தொகு]

ஒரு பிராமணத் துறவி ஒரு முறை மணப்புள்ளி பகவதியை பிரார்த்தனை செய்தததாக நாட்டுப்புற வழக்காறு கூறுகிறது. மடப்பள்ளி என்றழைக்கப்படும் சமையலறையில் அவர் பிரார்த்தனை செய்தார். அதுவே காலப் போக்கில் "மணப்புள்ளி" ஆகியிருக்க வேண்டும். இவருடைய இல்லம் "யாகக்கார"வின் ஒரு பகுதியான அக்னிஹோத்ர யாகங்கள் செய்யப்பட்ட இடத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவ்விடம் தற்போது "யக்கரா" என்று மாறியிருக்க வேண்டும். இதனாலேயே இக்கோயில் அமைந்துள்ள இடம் இப்பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.

மணப்புள்ளி பகவதி சிவபெருமானின் மகளான பத்ரகாளி ஆவார். அவள் தட்சனின் யாகத்தின் போது சிவபெருமானின் புனிதமான ஜடாமுடியிலிருந்து பிறந்தவர். பகவதி கருப்பு நிறத்தில் நான்கு கைகளுடன் உள்ளார். அவருடைய கைகளில் சூலம், கபாலம், கடகம், கேடம் ஆகியவை உள்ளன. மூன்று கண்கள், நான்கு பெரிய பற்கள், அழகான ஆடை, பல ஆபரணங்கள், பேய் வாகனத்தில் பிரகாசமாகவும், பளபளப்பாகவும், பயங்கரமான தோற்றத்துடனும் இருக்கிறார்.

திருவிழா[தொகு]

இந்த மூலவரான 'மணப்புள்ளி பகவதி' பகவதிக்கு மரியாதை செலுத்தும்விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. மலையாள நாட்காட்டி ஆண்டின் அடிப்படையில் பிப்ரவரி கடைசி வாரத்திற்கும் மார்ச் முதல் வாரத்திற்கும் இடையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 'கொடியேwட்டம்' கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா ஒரு வாரம் பூஜை சடங்கு, மாலையில் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இவ்விழாவினை விழாக்குழு நடத்துகிறது. 'வேலா கமிட்டி' (விழாக் குழு) ஏற்பாடு செய்துள்ளது, இது அனைத்தும் 'மணப்புள்ளிகாவு வேளா' என்ற பெருநாளுடன் முடிவடைகிறது. இந்த புனித நாளில் பகவதியை வழிபடுவதற்காக கேரளா மற்றும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manappullikavu Vela of Sree Manapulli Bhagavathy Temple | Festivals of Kerala". www.keralaculture.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்புள்ளிக்காவு_வேளா&oldid=3828713" இலிருந்து மீள்விக்கப்பட்டது