மட்டக்களப்புத் தமிழ்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மட்டக்களப்புத் தமிழ் என்பது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்புப் பகுதியில் வழக்கில் உள்ள தமிழைக் குறிக்கும். இது இலங்கைத் தமிழின் ஒரு வட்டார வழக்கு எனலாம். இப்பகுதியில் வாழும் தமிழ் மக்களது பண்பாடு, சூழல், வரலாறு போன்றவை தனித்துவமானவை. இதனால், இங்கு வழக்கில் உள்ள தமிழிலும் இதன் தாக்கங்கள் உள்ளதைக் காணலாம். மட்டக்களப்புத் தமிழில் பிற இடங்களில் வழக்கிழந்து போன பல பழந்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால், இலங்கையில் உள்ள பிற வட்டார வழக்குகளோடு ஒப்பிடும்போது தூய தமிழுக்குக் கிட்டியது மட்டக்களப்புத் தமிழே என்ற கருத்தும் உண்டு.