உள்ளடக்கத்துக்குச் செல்

மடைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்டில் சமையல் செய்யும் இடம் சமையலறை என்று சொல்லப்படுகிறது. இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம் “மடைப்பள்ளி” என்று அழைக்கப்படுகிறது. வீட்டில் சமையல் செய்யுமிடத்தை மடைவாயில் எனக் கூறும் வழக்கும் உண்டு. [1]

பெயர்க் காரணம்

[தொகு]

மடை என்னும் சொல் சமையல் செய்த சோற்றைக் குறிக்கும்.

  • தெய்வ மடையின் தேக்கிலை பகுக்கும் [2]
  • மகளிர் மடையுடன் (பொங்கலுடன்) சாலினி கோயிலுக்குச் சென்றனர் [3]
  • பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி வணங்கினை [4]
  • நிறம்படு குருதி புறம்படின் அல்லது, மடை எதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரை [5]
  • கொற்றவைக்குப் படைக்கப்பட்ட பொங்கல் படையல் மடை எனப்பட்டது. [6]

பள்ளி என்னும் சொல் இடத்தைக் குறிக்கும். [7] எனவே சமையல் செய்யுமிடம் மடைப்பள்ளி எனப்பட்டது

அடிக்குறிப்பு

[தொகு]
  1. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவைஆற்றிக்
    கோதில் அடிசில் குறைமுடிப்பான் - மேதிக்
    கடைவாயில் கார்நீலம் கண்விழிக்கும் நாடன்
    மடைவாயில் புக்கான் மதித்து. (நளவெண்பா 386)
  2. பெரும்பாணாற்றுப்படை 104
  3. மதுரைக்காஞ்சி 607
  4. குறுந்தொகை 362
  5. பதிற்றுப்பத்து 79
  6. புழுக்குடை நோலையும் விழுக்குடை மடையும் சிலப்பதிகாரம் வேட்டுவ வரி 37
  7. மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
    சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்,
    மூக்கின் வளிஇசை யாப்புறத் தோன்றும். (தொல்காப்பியம் 1-100)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடைப்பள்ளி&oldid=2076685" இலிருந்து மீள்விக்கப்பட்டது