மடங்கு (கணிதம்)
அறிவியலில் மடங்கு (multiple) என்பது ஏதேனுமொரு கணியம் மற்றும் ஒரு முழு எண் இரண்டின் பெருக்குத்தொகை ஆகும்.[1][2][3] அதாவது, a, b இரு கணியங்கள் மற்றும் b = na (n ஒரு முழுவெண்) எனில், b என்பது a இன் மடங்கு எனப்படும். இதில் n என்பது "பெருக்கி" அல்லது "பெருக்கெண்" எனப்படும். a என்பது 0 இல்லையெனில், இக்கூற்று "b/a ஒரு முழுவெண்" என்பதற்குச் சமானமாகும்.[4][5][6]
கணிதத்தில் a , b இரண்டும் முழுவெண்கள் மற்றும் b ஆனது a இன் மடங்கெனில், a என்பது b இன் வகுஎண் எனப்படும். அதாவது "a ஆனது b ஐ வகுக்கும்" எனப்படுகிறது. a, b முழுவெண்கள் இல்லையெனில் மடங்கு என்பதற்குப் பதிலாக "முழுவெண் மடங்கு" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மடங்கு என்பது வேறுவிதமான பெருக்கல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக p, q, r என்பன மூன்று பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் p = qr எனில், p பல்லுறுப்புக்கோவையானது, q என்ற பல்லுறுப்புக்கோவையின் மடங்கு எனப்படும்.
சில புத்தகங்களில் "b என்பது a இன் முழுவெண் மடங்கு" என்ற பொருளில், "a என்பது b இன் உள்மடங்கு" எனக் குறிக்கப்படுகிறது.[7][8] இது அளவையியல் அலகுகளில் முதன்மை அலகின் உள்மடங்காக அமையும் சிறு அலகுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (எடுத்துக்காட்டு: பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்[9]). எடுத்துக்காட்டாக ஒரு மில்லிமீட்டர் என்பது மீட்டரின் 1000-மடி உள்மடங்காகும்.[9][10]
எடுத்துக்காட்டுகள்
[தொகு]14, 49, –21, 0 என்பவை 7 இன் மடங்குகள்; ஆனால் 3, –6 இரண்டும் 7 இன் மடங்குகள் அல்ல.
- , என்பது விகிதமுறு எண்; முழுவெண் இல்லை
- , விகிதமுறு எண்; முழுவெண் இல்லை.
பண்புகள்
[தொகு]- 0 என்பது எல்லா எண்களின் மடங்காகும் ().
- ஒவ்வொரு முழுவெண்ணும் அதனதன் மடங்காக இருக்கும்.
- , இரண்டும் இன் மடங்குகள் எனில், , இரண்டும் இன் மடங்குகளாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weisstein, Eric W., "Multiple", MathWorld.
- ↑ WordNet lexicon database, Princeton University
- ↑ WordReference.com
- ↑ The Free Dictionary by Farlex
- ↑ Dictionary.com Unabridged
- ↑ "Cambridge Dictionary Online". Archived from the original on 2009-12-19. பார்க்கப்பட்ட நாள் 2018-06-20.
- ↑ "Submultiple". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster. 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
- ↑ "Submultiple". Oxford Living Dictionaries. Oxford University Press. 2017. Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
- ↑ 9.0 9.1 International Bureau of Weights and Measures (2006), The International System of Units (SI) (PDF) (8th ed.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-822-2213-6
- ↑ "NIST Guide to the SI". Section 4.3: Decimal multiples and submultiples of SI units: SI prefixes