மஞ்சூரியா மீதான உருசிய படையெடுப்பு
Appearance
மஞ்சூரியா மீதான உருசிய படையெடுப்பானது முதலாம் சீன சப்பானியப் போருக்கு பிறகு நடைபெற்றது. ஜப்பானிடம் சீனா தோற்றது மற்றும் ஜப்பான் மஞ்சூரியாவை ஆக்கிரமித்தது போன்ற காரணங்களால் ஐரோவாசியா முழுவதும் தங்களது எல்லைகளை விரிவாக்க உருசியர்கள் செயல்பட்டனர்.[1][2]
பிறகு
[தொகு]நவம்பர் 1900 ஆவது ஆண்டு மஞ்சூரியாவின் பெரும் பகுதிகள் உருசிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. மதிப்பீடுகளின்படி உருசியப் படைகளை விட சீனப் படைகளுக்கு பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தது. உருசிய ரயில் அமைப்பை தாக்கியதற்காக சீனர்கள் தாக்கப்பட்டனர். எனினும், உருசியாவின் கொள்கையில் பிறகு மாற்றம் ஏற்பட்டது. குறைந்தது எட்டு கொசக்குகள் பொதுமக்களுக்கு எதிராக குற்றம் செய்த காரணத்திற்காக ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
உசாத்துணை
[தொகு]- ↑ The Century illustrated monthly magazine, Volume 68. NEW YORK: The Century Co. 1904. p. 581. Retrieved 2011-07-06.(Original from Harvard University)
- ↑ Making of America Project (1904). The Century: a popular quarterly, Volume 68. NEW YORK: Scribner & Co. p. 581. Retrieved 2011-07-06.(Original from the University of Michigan)