உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சுளா (கன்னட நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுளா
பிறப்புஹொன்னேனஹள்ளி சிவண்ணா மஞ்சுளா
(1954-11-08)8 நவம்பர் 1954
தும்கூர், மைசூர் மாநிலம் (தற்போது கருநாடகம்), இந்தியா
இறப்பு12 செப்டம்பர் 1986(1986-09-12) (அகவை 31)
பெங்களூர், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1972–1986
வாழ்க்கைத்
துணை
அமிர்தம்
பிள்ளைகள்1

ஹொன்னேனஹள்ளி சிவண்ணா மஞ்சுளா (Honnenhalli Shivanna Manjula) (8 நவம்பர் 1954-12 செப்டம்பர் 1986) ஓர் இந்திய நடிகை கன்னடத் திரைப்படங்களிலும், தமிழகத் திரைப்படங்களிலும் (குமாரி மஞ்சுளா என்ற பெயரில் ) மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் (கன்னட மஞ்சுளா என்றும் ) நடித்துள்ளார். 1970கள் மற்றும் 1980களில் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் வெற்றிகரமான மற்றும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்காக பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார்.[1]

சொந்த வாழ்க்கை

[தொகு]

தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹொன்னஹள்ளி என்ற கிராமத்தில் எம். எச். சிவண்ணா மற்றும் தேவரம்மா ஆகியோருக்கு மஞ்சுளா பிறந்தார்.[2] இவரது தந்தை சிவண்ணா ஒரு காவல் உதவி ஆய்வாளராக இருந்தார். ஹுடுகாதடா ஹுடுகி மற்றும் கனசு நனசு போன்ற படங்களில் தன்னுடன் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் அம்ருதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அபிஷேக் என்ற மகன் பிறந்தான்.

தொழில்

[தொகு]

மஞ்சுளா தனது நடிப்பு வாழ்க்கையை 1965 இல் பிரபாத் கலவிதரு என்ற நாடகக் குழுவில் தொடங்கினார். 1966 ஆம் ஆண்டு மானே கட்டி நோடு என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கன்னடத் திரையுலகில் நுழைந்தார். 1972 ஆம் ஆண்டு மூத்த இயக்குனர் எம்.ஆர். விட்டல் இயக்கிய யாரா சாக்ஷி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ராஜ்குமார், விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், அசோக் மற்றும் சங்கர் நாக் உட்பட அனைத்து முன்னணி கன்னட நடிகர்களுடன் நடித்துள்ளார்.  இவர் நடிகர் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து சுமார் 35 படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்.[3]

மஞ்சுளா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1970களின் பிற்பகுதியில் ஒரு சிறந்த கன்னட கதாநாயகியாக இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த, ஆதிக்க மனப்பான்மை கொண்ட கிராமத்து பெண் வேடத்தில் அடிக்கடி தோன்றினார். சம்பாதிகே சவால், இரடு கனசு, சொசே தாண்டா சௌபாக்யா, பேசுகே மற்றும் சீதாராமு ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்களில் சில. ராமகிருஷ்ணா (தெலுங்கு), கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் (தமிழ்) போன்ற பிற மொழிகளிலும் நன்கு அறியப்பட்ட நடிகர்களுடனும் இவர் நடித்தார்.

இறப்பு

[தொகு]

1986 செப்டம்பர் 19 அன்று சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு ஆளாகி மஞ்சுளா இறந்தார்.[4][5] ஆரம்பத்தில் இது ஒரு விபத்தாகக் கருதப்பட்டாலும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த மரணத்தை தற்கொலை என்று செய்தி வெளியிட்டது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Manjula's Profile". Chitraranga.com. Archived from the original on 4 February 2007. Retrieved 18 August 2009.
  2. Patil, S.H. (2002). Community dominance and political modernisation: the Lingayats. Mittal Publications. p. 50. ISBN 81-7099-867-0.
  3. B. V. Shiva Shankar (30 March 2007). "Made for each other". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080916193749/http://www.hinduonnet.com/thehindu/fr/2007/03/30/stories/2007033001690100.htm. 
  4. Suresh Angadi (21 March 2021). "Kannada talents that departed early". Deccan Herald. https://www.deccanherald.com/entertainment/kannada-talents-that-departed-early-848899.htmlcite. 
  5. "This Sandalwood sensation rose from dustbin to success and met a fiery end". Suvarna Newstable. March 2018. https://newsable.asianetnews.com/editorial/this-sandalwood-sensation-rose-from-dustbin-to-success-and-met-a-fiery-end-manjula-kannada-film-sampathige-saval. 
  6. "From Soundarya and Shankar Nag to Kalpana, Manjula and Sunil - Sandalwood stars who passed away too soon". The Times of India. 5 February 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/photo-features/from-soundarya-and-shankar-nag-to-kalpana-manjula-and-sunil-sandalwood-stars-who-passed-away-too-soon/photostory/73962495.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_(கன்னட_நடிகை)&oldid=4261143" இலிருந்து மீள்விக்கப்பட்டது