மஞ்சுளா ரெட்டி
மஞ்சுளா ரெட்டி Manjula Reddy | |
---|---|
![]() | |
தேசியம் | இந்தியன் |
துறை | நுண்ணுயிரியல், பாக்டீரிய மரபணுவியல் |
கல்வி கற்ற இடங்கள் | புனித பிரான்சிசு பெண்கள் கல்லூரி (BSc)
ஐதராபாத்து பல்கலைக்கழகம் (MSc) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (PhD) |
ஆய்வு நெறியாளர் | செயராம் கௌரிசங்கர் |
அறியப்படுவது | பாக்டீரிய செல்சுவர் வளர்ச்சிக்கான நொதியை கண்டுபிடித்தார் |
விருதுகள் | வாழ்க்கை அறிவியலுக்கான இன்போசிசு விருது (2019) |
மஞ்சுளா ரெட்டி (Manjula Reddy) இந்தியாவைச் சேர்ந்த பாக்டீரியா மரபியல் நிபுணராவார். இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் ஐதராபாத்து நகரிலுள்ள உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையத்தில் தலைமை விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். பாக்டீரிய செல்சுவர் கட்டமைப்பு மற்றும் தொகுப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக மஞ்சுளா ரெட்டிக்கு 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியல் பிரிவுக்கான இன்போசிசு பரிசு கிடைத்தது. இந்திய அறிவியல் கழகத்திலும் தெலுங்கானா அறிவியல் கழகத்திலும் மஞ்சுளா ரெட்டி உறுப்பினராக உள்ளார்.
கல்வி மற்றும் தொழில்
[தொகு]மஞ்சுளா ரெட்டி 2002 ஆம் ஆண்டு உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியலுக்கான மையத்திலிருந்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு இவர் தனது சொந்த ஆய்வகத்தை அந்நிறுவனத்தில் தொடங்கினார்.[1]
ஆராய்ச்சி
[தொகு]மஞ்சுளா ரெட்டி பாக்டீரியா செல் சுவர்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.[1] குடல் பகுதி பாக்டீரியாக்களில் ஒரு புதுவகையான நொதியாலான செல்சுவர் கட்டமைப்பை அடையாளம் கண்டார். இந்த நொதி பெப்டிதோகிளைகானில் சில குறுக்கு இணைப்புகளை நீராற்பகுப்பு செய்வதன் மூலம் பாக்டீரியாவின் செல் சுவரை விரிவாக்க அனுமதிக்கிறது என்று இவர் கண்டறிந்தார்.[2] பெப்டிதோகிளைக்கான் தொகுப்பு பாதையை குறிவைக்கக்கூடிய புதிய எதிர் நுண்ணுயிரிகளை உருவாக்குவதை இவர் நோக்கமாகும்.[3] இதற்காக குடல் பகுதி பாக்டீரியாக்களையும் ஆக்டினோபாக்டீரியா மற்றும் மைக்கோபாக்டீரியா வகை பாக்டீரியாக்களையும் இவர் மாதிரியாக எடுத்துக் கொண்டார்.[4]
மரபணு மாற்றிகள் மற்றும் எதிர் மரபணு மாற்றிகள் போன்ற சடுதி மாற்றிகளை அடையாளம் காண்பதற்கான செயல்முறைக்கு காப்புரிமை பெற்ற விஞ்ஞானிகள் குழுவில் மஞ்சுளாவும் ஒரு பகுதியாக இருந்தார். இந்த செயல்முறைக்கான காப்புரிமை அமெரிக்காவில் 1999 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டிருந்தது. செயராமன் கௌரிசங்கரும் சாந்தி எம் பரதனும் இந்த அணியின் மற்ற விஞ்ஞானிகளாவர்.[5][6]
விருதுகள்
[தொகு]•2019 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியலுக்காக இன்போசிசு விருது.[7]
•2020 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தின் உறுப்பினர் கௌரவம்.[8]
•தெலுங்கானா அறிவியல் கழகத்தின் உறுப்பினர் என்ற கௌரவம்.[9]
•பாக்டீரியாவியல் செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் என்ற கௌரவம் [10]
சொந்த வாழ்க்கை
[தொகு]தனது தந்தை மோகன் ரெட்டியும், தனது தாயும் ஒரு விஞ்ஞானியாக தனது வாழ்க்கைக்கு பெரிதும் உறுதுணையாக இருந்ததாக மஞ்சுளா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஓர் இருதயநோய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[11]
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்
[தொகு]![]() | |
---|---|
![]() |
https://www.youtube.com/watch?v=FlaqsjhsWuo
டாக்டர் மஞ்சுளா ரெட்டி தனது ஆராய்ச்சியை 2019 ஆம் ஆண்டு இன்போசிசு பரிசு பெற்றபோது வெற்றியாளர்களின் கருத்தரங்கில் வழங்குகிறார் |
- Chodisetti, Pavan Kumar, and Manjula Reddy. "Peptidoglycan hydrolase of an unusual cross-link cleavage specificity contributes to bacterial cell wall synthesis." Proceedings of the National Academy of Sciences 116.16 (2019): 7825-7830.[2]
- Singh, Santosh Kumar, et al. "Regulated proteolysis of a cross-link–specific peptidoglycan hydrolase contributes to bacterial morphogenesis." Proceedings of the National Academy of Sciences 112.35 (2015): 10956-10961.[12]
- Reddy, Manjula. "Role of FtsEX in cell division of Escherichia coli: viability of ftsEX mutants is dependent on functional SufI or high osmotic strength." Journal of bacteriology 189.1 (2007): 98-108.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jayaraj, Nandita; Shah, Mrinal (2020-02-07). "Meet the two women scientists who won the Infosys Prize this year" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/science/meet-the-two-women-scientists-who-won-the-infosys-prize-this-year/article30760728.ece.
- ↑ 2.0 2.1 Chodisetti, Pavan Kumar; Reddy, Manjula (2019-04-16). "Peptidoglycan hydrolase of an unusual cross-link cleavage specificity contributes to bacterial cell wall synthesis" (in en). Proceedings of the National Academy of Sciences 116 (16): 7825–7830. doi:10.1073/pnas.1816893116. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:30940749. https://www.pnas.org/content/116/16/7825.
- ↑ "Infosys Prize - Laureates 2019 - Manjula Reddy". www.infosys-science-foundation.com. Retrieved 2020-06-07.
- ↑ "CCMB | Research-Group". www.ccmb.res.in. Retrieved 2020-06-07.
- ↑ [1], "Process for identifying mutagens and antimutagens", issued 1998-10-19
- ↑ "CCMB | Patents". www.ccmb.res.in. Retrieved 2020-06-07.
- ↑ "CCMB scientist Manjula Reddy wins 2019 Infosys Prize for Life Sciences". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2019-11-08. Retrieved 2020-06-28.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Fellowship | Indian Academy of Sciences". www.ias.ac.in. Retrieved 2020-06-07.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Telangana Academy of Sciences (TAS) Hyderabad". www.tasc.org.in. Retrieved 2020-06-07.
- ↑ "Editorial Board | Journal of Bacteriology". jb.asm.org. Retrieved 2020-06-07.
- ↑ Interview with Infosys Award 2019 Winner - Smt. Manjula Reddy - CCMB - Trishakti - Acchamga Telugu (in ஆங்கிலம்), retrieved 2020-06-07
- ↑ Singh, Santosh Kumar; Parveen, Sadiya; SaiSree, L.; Reddy, Manjula (2015-09-01). "Regulated proteolysis of a cross-link–specific peptidoglycan hydrolase contributes to bacterial morphogenesis" (in en). Proceedings of the National Academy of Sciences 112 (35): 10956–10961. doi:10.1073/pnas.1507760112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:26283368. https://www.pnas.org/content/112/35/10956.
- ↑ Reddy, Manjula (2007-01-01). "Role of FtsEX in Cell Division of Escherichia coli: Viability of ftsEX Mutants Is Dependent on Functional SufI or High Osmotic Strength" (in en). Journal of Bacteriology 189 (1): 98–108. doi:10.1128/JB.01347-06. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9193. பப்மெட்:17071757. https://jb.asm.org/content/189/1/98. பார்த்த நாள்: 2020-12-31.