மச்சிகுயெங்கா

மச்சியெங்கா (Machiguenga) [A 1]) என்பது அந்தீசு மலைத்தொடரின் கிழக்கு சரிவுகள் மற்றும் தென்கிழக்கு பெருவின் அமேசான் படுகையில் உள்ள அடர் வனங்களில் அல்லது மொன்டானா பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். 2020 இல் இவர்களின் மக்கள் தொகை சுமார் 18,000 என இருந்தது. முன்பு இவர்கள் வேட்டையாடுபவர்களாக இருந்தனர். ஆனால் இன்று பெரும்பான்மையானவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி சோளம் மற்றும் வாழை ஆகியவை முக்கிய பயிர்களாக இருந்தன. ஆனால் இன்று வணிகப் பயிர்களான காப்பி மற்றும் கொக்கோ ஆகியவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பன்றி மற்றும் குரங்குளை உண்டு வந்தனர். ஆனால் இன்று மீன்களும் மிகவும் முக்கியமானதாகிவிட்டன.[1] இவர்கள் அத்தியாவசிய பயிர்களை பயிரிட்டு தன்னிறைவு பெற விரும்புகின்றன. தனிநபர்களுக்கு இருக்கும் தாராளமாக நிலப் பங்கீடு மற்றும் தங்கள் பகுதியில் மோதல்கள் இல்லாததால் இது சாத்தியமாகிறது.[2]
கலாச்சாரம்
[தொகு]பெரும்பாலான மச்சிகுயெங்காவுக்கு தனிப்பட்ட பெயர்கள் இல்லை. ஒரு குழுவின் உறுப்பினர்கள் உறவினர் சொற்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் வேறு குழு அல்லது பழங்குடியின உறுப்பினர்கள் தங்கள் எசுப்பானிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.[3][4]
இவர்களில் பெரும்பாலானவர்கல் இன்று கிறிஸ்துவர்கள் (முக்கியமாக கத்தோலிக்கர்கள்) ஆனால் பொதுவாக இவர்கள் இன்னும் ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆவிகளும் பேய்களும் இவர்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன.
இச்சமூகம், தாவரங்கள் மற்றும் மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர்கள் என்றாலும், வெளி உலகத்தினரல் பரவும் புதிய தொற்று நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெண்கள் கையால் நெய்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தியிலான தூனிக் எனப்படும் உடைகளை அணிகின்றனர். இந்த ஆடை உள்ளூர்எசுப்பானிய மொழியில் குஷ்மாக்கள் என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்களுக்கு வி கழுத்தும், பெண்களுக்கு நேரான கழுத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] அவர்கள் பனை மரங்களை ஒரு சட்டகமாகப் பயன்படுத்தி குடிசைகளை வடிவமைக்கிறார்கள். பனை ஓலைகளை கூரைகளாக பயன்படுத்துகின்றனர்.[5] இவர்களது எழுத்தறிவு விகிதம் 30 முதல் 60 சதவீதம் வரை இருக்கும்.[6] ஒவ்வொரு விரிவாக்கப்பட்ட குடும்பக் குழுவும் சுயமாக நியமிக்கப்பட்ட "தலைவரால்" நிர்வகிக்கப்படுகிறது.[5]
குடும்ப வாழ்க்கை
[தொகு]முன்பு பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொண்டனர். இன்று அவர்கள் பொதுவாக சில ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப உறவுகளில் நுழைகிறார்கள். பெண்கள் சராசரியாக எட்டு முதல் பத்து கருத்தரிப்புகளைக் கொண்டுள்ளனர். பல பழங்குடி பழங்குடியினதில் காணப்படுவது போலவே, குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. திருமணத்தின் முதல் ஆண்டில் உறவு பெரும்பாலும் நிலையற்றதாகவும், பிரிவினை பொதுவானதாகவும் இருக்கிறது. இவர்கள் சமூகத்தில் ஒரு கணவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோருடன் வசிக்கிறான். அங்கிருநுது தங்களுக்கான வேளாண்மை நிலங்களை உருவாக்கிக்கொண்டு தங்கள் சொந்த வீட்டைக் கட்டுகிறார்கள். முன்பு பல ஆண்களுக்கு பல மனைவிகள் இருந்தனர்.
மொழி
[தொகு]மச்சிகுயெங்கா மொழி, பெருவில் சுமார் 12,000 மக்களால் பேசப்படும் மச்சிகுரன் மைபுரியன் (அரவாக்கன் மொழிக் குடும்பம்) மொழியின் கேம்பா குழுவிற்கு சொந்தமானது. இவர்களுக்குள் பல பேச்சுவழக்குகள் உள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ The incorrect spelling form "Machigenga" was created as a neologism by the BBC show Mark & Olly: Living with the Tribes|Living with the Machigenga aired in 2009 and 2010 which is strongly criticized in Anthropology News, May 2011, see also TV series about Amazonian tribe accused of faking scenes.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rosengren, D. 'Los Matsigenka', in Guía Etnográfica de la Alta Amazonía, ed. by Santos-Granero, F. and F. Barclay (2004)
- ↑ Johnson, Allen (1983), "Machiguenga Gardens", in Raymond B. Hames; William T. Vickers (eds.), Adaptive Responses of Native Amazonians, Elsevier, pp. 29–63, doi:10.1016/b978-0-12-321250-4.50006-3, ISBN 978-0-12-321250-4
- ↑ Snell, Wayne W. (1964). Kinship Relations in Machiguenga, pp. 17-25.
- ↑ Johnson, Allen W. Families of the Forest: The Matsigenka Indians of the Peruvian Amazon. University of California Press, 2003. pp. 9-10. Retrieved from கூகுள் புத்தகங்கள் on April 1, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-23242-6.
- ↑ 5.0 5.1 5.2 CERT (2008). "Machiguenga Indians". Christian Emergency Relief Team. Archived from the original on November 19, 2008. Retrieved January 14, 2009.
- ↑ Gordon, Raymond G. Jr (ed.). "Machiguenga". Ethnologue. Retrieved January 14, 2009.
Rosegren, D. 2004. 'Los Matsigenka', in Guía Etnográfica de la Alta Amazonía, in Guía Etnográfica de la Alta Amazonía pp. 1–157, ed. by Santos-Granero, F. and F. Barclay. Balboa: Smithsonian Tropical Research Institute, and Lima: Instituto Frances de Estudios Andinos.
Rosengren, D. 2017. 'Marriage Matsigenka Style: Some Critical Reflections of Marriage Practices', pp. 15–35, in Valentine, P., S. Beckerman, and C. Alès "The Anthropology of Marriage in Lowland South America. [University Press of Florida]
வெளி இணைப்புகள்
[தொகு]- Machiguenga at Native Planet
- Machiguenga at Shinai
- Matsigenka
- Allen Johnson: Matsigenka Research
- Matsigenka Texts collected by Lev Michael and Christine Beier at the Archive of the Indigenous Languages of Latin America.