உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கைமடம் வீர நரசிம்மப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கைமடம் வீர நரசிம்மப்பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருக்குறையலூருக்கு அடுத்தபடியாக திருவெண்காட்டிற்கு முன் உள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

கிருத யுகத்தில் கர்தபப்ரஜாபதி என்னும் அந்தணராகவும் திரேதா யுகத்தில் உபரிசிரவசு என்னும் சத்திரிய மன்னனாகவும், துவாபர யுகத்தில் வைரமோகன் என்னும் வைசியனாகவும் பிறந்து இங்கு உள்ள பெருமாளை வழிபட்டதால் இங்குள்ள மூலவர் வைரநரசிம்மன் என்றழைக்கப்படுகிறார். [1]

பிற சிறப்புகள்[தொகு]

திருவாலி-திருநகரி திவ்யதேசங்களுக்கு முற்பட்ட பெருமையுடைய இத்தலம், பஞ்ச நரசிம்மத்தலங்களில் இரண்டாவது தலமாகும். திருமங்கையாழ்வார் ஓராண்டில் 1008 வைணவர்களுக்கு சிறப்பு செய்து பெருமாளின் அருளைப் பெற்ற தலமாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014