மங்களூர் சமையல்
மங்களூர் சமையல் (Mangalorean cuisine) என்பது மங்களூரின் உணவு வகைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கூட்டுப் பெயராகும். இது உடுப்பி போன்ற உணவு வகைகளையும், துளு மக்கள், கவுட சாரஸ்வத் பிராமணர், மங்களூர் கத்தோலிக்கர்கள், துளு மற்றும் கன்னட பிராமணர்கள் மற்றும் பியாரிகள் போன்ற மங்களூர் சமூகங்களின் உணவு வகைகளையும் உள்ளடக்கியது.
வகைகள்
[தொகு]மங்களூர் உணவு வகைகள் பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளால் செல்வாக்குப் பெற்றுள்ளன. பல உணவு வகைகள் இப்பகுதியின் பல்வேறு சமூகங்களுக்கு தனித்துவமானவை. தேங்காய் மற்றும் கறிவேப்பிலை இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் போன்றவை பெரும்பாலான மங்களூர் கறிகளுக்கு பொதுவான பொருட்களாகும். மங்களூர் மீன் கறி துளு நாட்டில் பிரபலமான உணவாகும். நன்கு அறியப்பட்ட துளு உணவுகளில் நீர் தோசை, மசாலா தோசை, நெய் கோழி வறுவல், கோழி சுக்கா, கோரி ரோட்டி (கிரேவியில் நனைத்த உலர் அரிசி செதில்கள்), பங்கூட் புலிமுஞ்சி (காரமான புளிப்பு வெள்ளி-சாம்பல் கானாங்கெளுத்திகள்) ஆகியவை அடங்கும். மங்களூரில் உள்ள துளு சைவ உணவு வகைகள், உடுப்பி உணவு என்றும் அழைக்கப்படுகின்றன. இது மாநிலம் மற்றும் பகுதி முழுவதும் அறியப்படுகிறது மற்றும் விரும்பப்படுகிறது. கோலிபஜ்ஜி என்றும் அழைக்கப்படும் மங்களூர் பஜ்ஜி, மைதா, தயிர், அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான சிற்றுண்டியாகும்.
அசைவ உணவு
[தொகு]மங்களூர் ஒரு கடலோர நகரம் என்பதால், மீன் பெரும்பாலான மக்களின் பிரதான உணவை உருவாக்குகிறது. [1] மங்களூர் கத்தோலிக்கர்களின் சன்னா-துக்ரா மாஸ் (பன்றி இறைச்சி), முஸ்லிம்களின் ஆட்டிறைச்சி பிரியாணி போன்றவை நன்கு அறியப்பட்ட உணவுகளாகும். கப்பாலா, சாண்டிஜ் மற்றும் புலி முஞ்சி போன்ற சிற்றுண்டிகள் மங்களூருக்கு தனித்துவமானது. தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் காலி (கள்ளு) என்ற நாட்டு மதுபானம் பிரபலமானது. [2]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Typically home" இம் மூலத்தில் இருந்து 2012-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/65EU5GBXd?url=http://www.hindu.com/mp/2007/08/11/stories/2007081150880400.htm. பார்த்த நாள்: 2008-07-09.
- ↑ Stephen D'Souza. "What's in a Name?". Daijiworld Media Pvt Ltd Mangalore. Archived from the original on 2008-03-05. பார்க்கப்பட்ட நாள் 2008-03-04.