மகேந்திர குமாரி
மகேந்திர குமாரி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1991 - 1996 | |
முன்னையவர் | ராம்ஜி லால் யாதவ் |
பின்னவர் | நவல் கிசோர் சர்மா |
தொகுதி | அல்வர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1942 பூந்தி நகரம், இராசத்தான் |
இறப்பு | 27 சூன் 2002 புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரதாப் சிங் |
மகேந்திர குமாரி (Mahendra Kumari) (1942-27 ஜூன் 2002) இந்திய மக்களவை உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் இராசத்தான் மாநிலத்தின் அல்வார் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பூந்தி நகரத்தில் 1942 ஆம் ஆண்டு ஓர் அரச குடும்பத்தில் பிறந்த இவர் குவாலியரில் அமைந்துள்ள சிந்தியா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். மேலும் இவர் அல்வாரின் அரசர் பிரதாப் சிங்கின் மனைவியும் ஆவார்.
1991 முதல் 1996 வரை இராசத்தானின் அல்வார் மக்களவைத் தொகுதியைபிரதிநிதித்துவப்படுத்தும் பத்தாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1] 1993 முதல் 1996 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் குழுவிலும், 1993 முதல் 1995 வரை அவைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
விளையாட்டில் தீவிர ஆர்வலரான இவர் துப்பாக்கி சுடும் போட்டியில் வாகையர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், டென்னிசு, நீச்சல் மற்றும் சவாரி ஆகியவற்றில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்தார். 1995 ஆம் ஆண்டில் சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெற்ற பெண்கள் குறித்தான நான்காவது உலக மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவில் மகேந்திர குமாரி ஓர் உறுப்பினராக இருந்தார்.
இவர் 27 சூன் 2002 அன்று புது தில்லியில் தனது 60வது வயதில் ஒரு சிறு நோய்த்தொற்றால் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.