மகிசாதல் பெண்கள் கல்லூரி
Appearance
মহিষাদল গার্লস কলেজ | |
வகை | இளங்கலை பொதுக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1969 |
சார்பு | வித்யாசாகர் பல்கலைக்கழகம் |
தலைவர் | முனைவர்.சௌமென் குமார் மஹாபத்ரா |
முதல்வர் | முனைவர்.உத்பால் குமார் உத்தசானி |
அமைவிடம் | ரங்கிபாசன் , மகிசாதல் , , 721628 , 22°11′31″N 87°59′33″E / 22.191832°N 87.9923977°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
மகிசாதல் பெண்கள் கல்லூரி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட,[1] ஒரு பெண்கள் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, அந்த மாவட்டத்தின் ஒரே மகளிர்க் கல்லூரியாகும். ஆரம்பத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கபட்டிருந்த இக்கல்லூரி தற்போது வித்யாசாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
துறைகள்[தொகு]
இக்கல்லூரி கீழ்க்கண்ட துறைகளின் கீழ் பல்வேறு பாடங்களை வழங்குகிறது :
அறிவியல் பிரிவு[தொகு]
- வேதியியல்
- கணினி அறிவியல்
- இயற்பியல்
- கணிதம்
- ஊட்டச்சத்து
- உடலியல்
- மானுடவியல்
கலை மற்றும் வணிகப் பிரிவு[தொகு]
- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு
- நிலவியல்
- அரசியல் அறிவியல்
- சமூகவியல்
- தத்துவம்
- கல்வி
- இசை
- உடற்கல்வி
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) அங்கீகாரம் பெற்று 2006 ஆம் ஆண்டில் B தகுதியும் வழங்கப்பட்டது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Affiliated College of Vidyasagar University". Archived from the original on 2012-02-25.
- ↑ "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf.