மகாபலேசுவர் சாயில்
மகாபலேசுவர் சாயில் (ஆங்கிலம்: Mahabaleshwar Sail) 1943 ஆக்ஸ்ட் 4 அன்று பிறந்த [1] இந்திய எழுத்தாளராவார். 2016 இல் இவரது 'அவ்தான்' என்ற புதினத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [2] [3]
வாழ்க்கை
[தொகு]மகாபலேசுவர் சாயில் 1943 ஆகஸ்ட் 4 ஆம் தேதி கர்நாடகாவின் வடகன்னட மாவட்டத்திலுள்ள மசாலியில் உள்ள சேசபாக் என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சாயிலின் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தவர். தந்தையின் மறைவின் காரணமாக, இவர் தனது குழந்தை பருவத்தில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆறாவது வயதில் பள்ளியைத் தொடங்கிய இவர் எட்டாம் வகுப்பு வரையில் படித்தார். [4] பின்னர், இந்தியத் தரைப்படையில் சேர்ந்தார். 1965 ஆம் ஆண்டு இந்திய-பாக்கித்தான் போரில் பங்கேற்றார். [5] போரின் போது குசேனிவாலா எல்லையில் நிறுத்தப்பட்டார். [6]
இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லையில் 1964-1965 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராகவும் பணியாற்றினார். [7] சாய்ல் வனத்துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். கோவா, தாமன் மற்றும் தையு காவல் துறையிலும் பணியிலிருந்தார். ஓய்வு பெறும் வரை இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றினார். [8] [9]
இலக்கியம்
[தொகு]ஆரம்பத்தில் மராத்திய மொழியில் எழுதினார். ஆனால் பின்னர் கொங்கணி மொழிலும் எழுதத் தொடங்கினார்.[10] பிரகலாத் கேசவ் அத்ரே என்ற இவரது முதல் கதை சாப்டாகிக் நேவுக் என்ற வார இதழில் வெளிவந்தது. [11] தாசுகண்ட் பிரகடனத்திற்குப் பிறகு போர் நிறுத்தக் காலத்தில் இவர் எழுதிய முதல் கதை இது. [12]
சாயில் கொங்கணி மொழியில் கதைகள், புதினங்கள் மற்றும் குழந்தை இலக்கியங்களை எழுதியுள்ளார். மராத்திய மொழியிலும் புதினங்கள், கதைகள் மற்றும் நாடகங்களை எழுதியுள்ளார். [13] இவரது முதல் கொங்கணி புதினம் 1996 இல் வெளியிடப்பட்ட காளி கங்கா என்பதாகும். [14] இது கார்வாரில் காளி ஆற்றின் (கர்நாடகா) கரையில் உள்ள விவசாய சமூகங்களின் வாழ்க்கையை கையாண்டது. [15] 1993 ஆம் ஆண்டில் தரங்கா என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கொங்கணி மொழியில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். [16]
இவர் கொங்கணி மொழியில்அத்ருஷ்ட் மற்றும் ஆரண்யகாண்ட் என்ற இரு புதினங்களை எழுதியுள்ளார். [17] அத்ருஷ்ட் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட கொங்கணி மொழிப் படமான பால்டடாச்சோ முனிஸ் வடிவத்தில் தழுவி எடுக்கப்பட்டது. [18] [19]
விமர்சனம்
[தொகு]சாயிலின் எழுத்து தலைப்பில் ஆராய்ச்சி மற்றும் கார்வார் பிராந்தியத்தைச் சேர்ந்த கொங்கணி மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இவரது புதினங்கள் வலுவான பெண் கதாநாயகிகளின் பயன்பாடு மற்றும் கதாபாத்திரங்களின் சிறந்த சித்தரிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. [20]
கொங்கணி மொழியில் சாய்லின் யுக் சன்வர் மற்றும் மராத்திய மொழியில் தாண்டவ் ஆகியவை கோவா விசாரணையை அடிப்படையாகக் கொண்டவை. [21] இரண்டு புதினங்களும் பரவலாக விவாதிக்கப்பட்டன. வித்யா பை எழுதிய ஏஜ் ஆஃப் ப்ரென்ஸி என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு ஹார்பர்காலின்ஸ் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டது. [22]
இவரது புதினமான விகார் வில்கோ போதைப்பொருள் சிக்கலை அடிப்படையாகக் கொண்டது. [23] அவ்தான் பாரம்பரிய குயவர்கள் தங்கள் பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்டது. [24] சாய்லின் எழுத்துக்கு மதிப்புமிக்க சரஸ்வதி சம்மான் விருது, 2016 உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. [25]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]- சாகித்திய அகாதமி விருது, 1993 [26]
- முனைவர் டி.எம்.ஏ பை விருது (1997) [27]
- கோவா கலா அகாதமி விருது (1989 மற்றும் 1996) [28]
- கோவா அரசாங்கத்தின் கலாச்சார விருது (2006) [29]
- கதா விருது (2007) [30]
- கோவா அரசாங்கத்தின் இலக்கிய விருது (2007) [31]
- விம்லா வி. பை விசுவ கொங்கனி சாகித்ய புரஸ்கார் (2010)
- சரஸ்வதி சம்மான் விருது (2016) [32]
மேலும், சாகித்திய அகாதமி, கர்நாடக கொங்கணி சாகித்ய அகாதமி மற்றும் கோவா கலா அகாதமி போன்ற பல்வேறு அரசு மற்றும் இலக்கிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார். [33] இவர் 2005 இல் அகில இந்திய கொங்கனி பரிசத்தின் தலைவராக இருந்தார். [34]
குறிப்புகள்
[தொகு]- ↑ Sumit, Roy. "भारत -पाक सीमा पर युद्ध लड़ चुके हैं महाबलेश्वर सैल, अब साहित्य के मिला ये बड़ा सम्मान" (in Hindi). NDTV India. https://khabar.ndtv.com/news/literature/konkani-author-mahabaleshwar-sail-gets-saraswati-samman-1668148. பார்த்த நாள்: 22 March 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
- ↑ "Konkani author Mahabaleshwar Sail gets Saraswati Samman". Business Standard. http://www.business-standard.com/article/pti-stories/konkani-author-mahabaleshwar-sail-gets-saraswati-samman-117030900808_1.html. பார்த்த நாள்: 22 March 2017.
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ https://khabar.ndtv.com/news/literature/konkani-author-mahabaleshwar-sail-gets-saraswati-samman-1668148
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Mahabaleshwar-Sail-chosen-for-Konkani-award/article15783290.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ http://www.edristi.in/en/mahabaleshwar-sail-honoured-saraswati-samman-2016/
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
- ↑ https://harperbroadcast.com/2017/01/29/a-writers-ability-to-create-literature-is-a-gift-that-he-is-born-with/
- ↑ https://harpercollins.co.in/book/age-of-frenzy/
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ "AKADEMI AWARDS KONKANI (Since 1977)". Sahitya Akademi. Sahitya Akademi. பார்க்கப்பட்ட நாள் 22 March 2017.
- ↑ http://www.mangaloretoday.com/main/Vimala-V-Pai-Vishwa-Konkani-Award-to-Konkani-Novelist-Mahabaleshwar-Sail.html

- ↑ http://www.thehindu.com/news/national/konkani-writer-gets-saraswati-samman/article17436790.ece
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/
- ↑ http://www.loksatta.com/vyakhtivedh-news/mahabaleshwar-sail-1430394/