ப. சத்தியலிங்கம்
பி. சத்தியலிங்கம் P. Sathiyalingam | |
---|---|
இலங்கை, வட மாகாண சபை சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
வவுனியா மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | மருத்துவர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பத்மநாதன் சத்தியலிங்கம் (Pathmanathan Sathiyalingam) இலங்கைத் தமிழ் மருத்துவரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சத்தியலிங்கம் வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் எஸ். பத்மநாதனின் மகன் ஆவார்.[1] மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். சட்ட மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளிலும், திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுச் செயல்பாடுகளிலும் வங்காள தேசம், பிலிப்பைன்சு, சப்பான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கிறார்.[2][3][4]
அரசுப் பணி
[தொகு]சத்தியலிங்கம் வவுனியா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய வைத்திய அதிகாரி, மருத்துவ அத்தியட்சகர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளைத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[5][6]
அரசியலில்
[தொகு]சத்தியலிங்கம் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 19,656 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[7][8]
இவர் வட மாகாண சபையின் சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு[9][10] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (5 அக்டோபர் 2013). "TNA's Tussle Over Provincial Ministry Posts in North". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/36606-tnas-tussle-over-provincial-ministry-posts-in-north.html.
- ↑ Jayasuriya, Srinath Prasanna (24 செப். 2003). "Get back: LTTE orders striking health workers in North East". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013155235/http://archives.dailymirror.lk/2003/09/24/frontpage/2.html.
- ↑ "District Tobacco Control Cell – Vavuniya". Regional Director of Health Services - Vavuniya. Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
- ↑ "Tamil Civil Society Memo to the TNA regarding the Eastern Provincial Council Elections". தமிழ் கார்டியன். 29 சூலை 2012. http://tamilguardian.com/article.asp?articleid=5400.
- ↑ "Sri Lanka Red Cross Regional Operation and Coordinating Office ( ROCO) opened in Vavuniya". Sri Lanka Red Cross Society. Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
- ↑ "Contact Directory Northern Province" (PDF). மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம். 18 செப். 2013. p. 157. Archived from the original (PDF) on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 October 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734.
- ↑ "Sri Lanka's first Tamil CM announces Cabinet". தி நியூ இந்தியன் எக்சுபிரசு/பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 10 அக்டோபர் 2013. http://newindianexpress.com/world/Sri-Lankas-first-Tamil-CM-announces-Cabinet/2013/10/10/article1829560.ece.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்ஸ். 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.