உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க் கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளைய வில்லெம் வான் டி வெல்டே வரைந்த " பீரங்கிச் சூடு" என்னும் தலைப்பிட்ட ஓவியம். 17 ஆம் நூற்றாண்டின் ஒல்லாந்தக் கப்பல் ஒன்றைக் காட்டுகிறது.

போர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை வைத்துப் பேணுவது உண்டு.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "United Nations Convention on the Law of the Sea. Part II, Subsection C". United Nations. Retrieved 28 June 2015.
  2. Brook, Henry (2012). Warships. Usborne. pp. 4 to 7. ISBN 9781474915854.
  3. "Corvette | Fast, Maneuverable & Deadly". Britannica.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்_கப்பல்&oldid=4101608" இலிருந்து மீள்விக்கப்பட்டது