உள்ளடக்கத்துக்குச் செல்

போண்டா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'போண்டா, ரேமோ
Bondo, Remo
போண்டா இன இளம் பெண்
மொத்த மக்கள்தொகை
(5,129 (1991)[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
மொழி(கள்)
போண்டா மொழி

போண்டா அல்லது போண்டோ மக்கள் என்பவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மால்கான்கிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். இப்பகுதி, ஒரிசா, சத்தீசுக்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் கூடுமிடத்தில் உள்ளது. இவர்களில் இன்று ஏறத்தாழ 5000 பேர்கள்தான் இருக்கின்றனர் (1991 கணக்கெடுப்பின் படி). இவர்கள் முண்டா என்னும் ஆசுத்திரேலிய-ஆசிய குடும்பத்து மொழி பேசும் மக்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[2]. இம்மக்கள் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட (scheduled tribe) இனங்களில் ஓரினமாக பதிவு செய்ய்ப்பட்டுள்ளனர். இவர்கள் ரேமோ (Remo) என்றும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் பேசும் போண்டா மொழியில் ரேமோ என்றால் மக்கள் என்று பொருள். இவர்களுக்கு வழங்கும் பிற பெயர்கள் போண்டோ, போண்டோ பொரா'சா (Bondo Poraja).

இவ்வினத்தவர் ஓரளவுக்கு ஆடை அணிகலன்கள் அணிகின்றனர். இவ்வின மக்களின் பெண்கள் தங்கள் கழுத்தில் மிகவும் தடிப்பான வெள்ளி வளையங்களை அணிகின்றனர். காதிலும், மூக்கிலும் பல இடங்களில் தோடு, வளையங்கள் அணிகின்றனர். சிறு குழந்தைகளும் மூக்கணிகள் அணிகின்றனர். போண்டா இன மக்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.[1]. இம்மக்கள் தங்கள் தலை முடியில் விளக்கெண்ணெய் தேய்த்துக்கொள்கிறார்கள். இவ் இனப் பெண்கள் தங்களைவிட 10-15 அகவை (வயது) குறைந்த ஆண்களை மணந்து கொள்கின்றனர். திருமணம் செய்துகொள்ளும் பொழுது பெண்ணுக்கு 20-25 அகவையும் ஆணுக்கு ஏறத்தாழ 10 அகவையும் இருக்கும்[3].

இவர்கள், அருகில் உள்ள ஊர்ப்புற சந்தைகளில் பண்டமாற்று முறையில் ("பின்னிமோய் புரோத்தா, 'binnimoy protha')பொருள்களைப் பரிமாறுகிறார்கள். இம்மக்கள் தாங்கள் வாழிடங்களில் சென்று காண்பது எளிதல்ல என்று சிலர் கருதுவதால், ஞாயிற்றுக் கிழமை சந்தைகளில் காண்பதே பெரும்பாலும் நிகழ்வதாகும்.

துணைநூல்கள்

[தொகு]
  • Pancorbo, Luis (2008):"Bonda" en "Avatares. Viajes por la India de los dioses". pp. 147–167. Miraguano Ediciones, Madrid.

வெளி இணைப்புகள்

[தொகு]
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டா_மக்கள்&oldid=3490992" இலிருந்து மீள்விக்கப்பட்டது