உள்ளடக்கத்துக்குச் செல்

போட்டி (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய கொக்கு மற்றும் நீர்க்காகம் இடையே உணவிற்கானப் போட்டி
கடற்கரையோர ஓடக் குட்டையில் கடல் சாமந்திகளுக்கிடையே இருப்பிடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதில் போட்டி

உயிரியல் போட்டி (Competition (biology)) என்பது உயிரினங்கள் அல்லது இனங்களுக்கிடையேயான ஒரு தொடர்பைக் குறிக்கிறது. இரண்டுக்கும் உணவு, நீர் அல்லது இருப்பிடம் போன்ற வளங்கள் தேவைப்படுகின்றன. [1] போட்டியானது இரு உயிரினங்களின் உடற்தகுதியைக் குறைக்கிறது, ஏனெனில் உயிரினங்களில் ஒன்றின் இருப்பு எப்போதும் மற்றொன்றுக்கு கிடைக்கும் வளத்தின் அளவைக் குறைக்கிறது.[2]

சமூகச் சூழலியல் ஆய்வில், ஓர் இனத்தின் உறுப்பினர்களுக்குள் மற்றும் இனங்களுக்கிடையேயான போட்டி ஒரு முக்கியமான ஓர் உயிரியல் தொடர்பு ஆகும். சமூக அமைப்பு, இனப்பன்முகத்தன்மை மற்றும் எண்ணிக்கை இயக்கவியல் ஆகியவற்றை பாதிக்கும் பல உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளில் உயிரியல் போட்டியும் ஒன்றாகும்.[3]

உயிரினப் போட்டியில் குறுக்கீடு, சுரண்டல் மற்றும் வெளிப்படையான போட்டி என மூன்று முக்கிய வழிமுறைகள் உள்ளன. குறுக்கீடு மற்றும் சுரண்டல் போட்டியை போட்டியின் உண்மையான வடிவங்களாக வகைப்படுத்தலாம். இங்கு வெளிப்படையான போட்டி இல்லை. ஏனெனில் உயிரினங்கள் ஒரு வளத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அதற்குப் பதிலாக ஒரு வேட்டையாடலைப் பகிர்ந்து கொள்கின்றன.[3] ஒரே இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையேயான போட்டியானது சிறப்பின அகப்போட்டி என்றும், வெவ்வேறு இனங்களின் தனிநபர்களுக்கிடையேயான போட்டி இனமிடைப்போட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

போட்டி விலக்கு கொள்கையின்படி, வளங்களுக்காகப் போட்டியிடுவதற்குத் தகுதியற்ற இனங்கள் ஒன்று தகவமைத்துக் கொள்ள வேண்டும் அல்லது இறக்க வேண்டும். இருப்பினும் போட்டி விலக்கு என்பது இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் அரிதாகக் காணப்படுகிறது.[3] பரிணாமக் கோட்பாட்டின் படி, இயற்கைத் தேர்வில் வளங்களுக்காக இனங்களுக்குள்ளும் அதற்கு இடையேயும் நிகழும் போட்டி முக்கியமானதாகும். முதுகெலும்பிகளின் பரிணாம பல்லுயிர் வளர்ச்சியானது உயிரினங்களுக்கிடையேயான போட்டியால் அல்ல, காலியாக உள்ள வாழிடத்தை தனக்கான குடியிருப்புப் பகுதியாக்கிக் கொள்வதே என்று சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள் இதை பரிந்துரைத்துள்ளனர். இக்கருதுகோள் ரூம் டு ரோம் கருதுகோள் என அழைக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Begon, M.; Harper, J. L.; Townsend, C. R. (1996) Ecology: Individuals, populations and communities Blackwell Science.
  2. "Competition". globalchange.umich.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
  3. 3.0 3.1 3.2 "Species Interactions and Competition | Learn Science at Scitable". www.nature.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
  4. Sahney, Sarda; Benton, Michael J.; Ferry, Paul A. (2010-08-23). "Links between global taxonomic diversity, ecological diversity and the expansion of vertebrates on land". Biology Letters 6 (4): 544–547. doi:10.1098/rsbl.2009.1024. பப்மெட்:20106856. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டி_(உயிரியல்)&oldid=4048400" இலிருந்து மீள்விக்கப்பட்டது