போடமலை பெட்டா
போடமலை பெட்டா (Bodamalai Betta) என்பது 1,200 மீட்டர்கள் (3,937.0 அடி) உயரமுள்ள ஒரு மலையாகும். இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மேட்டூர் அணையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் (12.4 mi) மேற்கில் உள்ளது.
நிலவியல்[தொகு]
மலை 1,200 மீட்டர்கள் (3,937.0 அடி) உயரமானதாகவும், கிழக்கு மேற்காக 10 km (6.2 mi), வடக்கு தெற்காக 7 km (4.3 mi) பரப்பளவைக் கொண்டதாகவும் உள்ளது. தெற்கில் பள்ளத்தாக்குகள் சூழப்பட்டு 600 மீட்டர்கள் (1,968.5 அடி) உயம் கொண்ட மலைகளாக உள்ளது. போடமலை பெட்டா பகுதி ஆறாம் நிலை நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது, சராசரியாக 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரிக்டர் அளவுகோளில் 5-6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.[1][2]
மலையின் உச்ச வடக்கிலிருந்து 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கில் காவிரி ஆற்றின் துணை ஆறான பாலாறு உள்ளது. ஆற்றின் ஊடாக உள்ளூர் சாலை ஒன்று செல்கிறது.[3][1]
இதன் அருகில் 18 கி.மீ (11 மைல்) தொலைவில் கர்நாடக மாநிலம், சாமராசநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னக் கோட்டை என்ற ஊர் உள்ளது.
காலநிலை[தொகு]
போடமலை பெட்டா ஒரு ஈரப்பத துணைவெப்பமண்டல தட்பவெப்பநிலை பகுதியில் உள்ளது. ஏப்ரல் மாதம் மதிய நேர சராசரி வெப்பம் 91.76 ° F (° 33.20 ° சி) ஆக மிக வெப்பதான மாதமாக இருக்கும். சனவரி மாதங்களில் இரவு நேர வெப்பநிலை 59.18 ° F (° 15.10 ° சி) என நிலவும், பெப்ரவரி மாத இரவுநேர வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படும். அக்டோபர் மாதத்தை ஒட்டி மழைக்காலம் ஆகும். சனவரி மாதம் வறண்ட மாதமாகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Bodamalai Betta: India, Bethesda, Maryland, USA: National Geospatial-Intelligence Agency, retrieved 2011-01-20
- ↑ 2.0 2.1 Bodamalai Betta (mountain) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், retrieved 2012-02-24
- ↑ "29.6 km WxNW of Mettur", ACME Mapper 2.0, ACME Laboratories, Tele Atlas, retrieved 2011-01-20
வெளி இணைப்புகள்[தொகு]
- "Southern Indian Subcontinent: 4 Mountain Summits with Prominence of 1,500 meters or greater" Peaklist.org. Retrieved 2011-11-24