பொறையாறு
Appearance
பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும் ஊர்தான் அது. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான். இவன் சிறந்த கொடைவள்ளல்.
இவ்வூரில் குருகு இனக் கொக்குகள் மிகுதி. [1]
இந்த ஊர் நெல்வளம் மிக்கது. [2]
ஒருகாலத்தில் வேங்கட மலைக்கு வடக்கிலிருந்த நல்ல நெல் விளையும் நிலத்தைக் கொண்ட கல்லாடம் என்னும் ஊரில் வாழ்ந்த கல்லாடனார் என்னும் புலவரின் குடும்பம் பசியால் வாடியபோது இந்த ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக்கொண்டது. [3]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தாழைச் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய இறவு ஆர் இனக்குருகு இறை கொள இருக்கும் நறவு மகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு அன்ன என் நற்றோள் - உலோச்சனார் பாடல் நற்றிணை 131
- ↑ ததைந்த புனலின் செழுநகர் வரைப்பு … வேலி ஆயிரம் விளைக நின் வயலே - கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
- ↑ வேங்கட வைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பு … முதுகுடி கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்