உள்ளடக்கத்துக்குச் செல்

பொர்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொர்தோ
நகரச் சின்னம்
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
அரசு
 • நகரமுதல்வர்திரு அலான் ஜூபே
மக்கள்தொகை
2,50,082
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)

பொர்தோ (பிரெஞ்சு மொழி: Bordeaux ஒலிப்பு : பொ3ர்.தோ3 ) பிரான்சின் நகரங்களின் ஒன்று. தென்மேற்கு பிரான்சில் அட்லாண்டிக் கடற்கரை அருகில் கரோன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 250,082 (2008 கணக்கு). அதன் புறநகர் மற்றும் துணை நகரங்களுடன் இணைத்து பொர்த்தோ, பொர்த்தோ மெட்ரோபோலின் மையமாக அமைகிறது; இதன் மக்கள் தொகை பிரான்சு நாட்டின் ஒன்பதாவது மிகப் பெரிய மக்கள் தொகையான 737,492(2012) ஆகும். இது அக்குவிட்டென் பகுதியின் தலைநகரம் மட்டுமல்லாமல் கிரொண்டேவின் ப்ரிஃபெக்சரும் ஆகும். இந்நகரவாசிகளை பொர்டெலைஸ்(ஆண்கள்) எனவும் பொர்டெலைசெஸ்(பெண்கள்) எனவும் அழைப்பதுண்டு. பொர்டெலைஸ் என்பது அந்த நகரத்தையோ அல்லது அதை சுற்றியுள்ள பகுதியையோ கூட குறிக்கும்.

இந்நகரத்தின் செல்லப் பெயர் ”லா பெர்லெ டி அக்குவிட்டென்” [La perle d'Aquitaine (The Pearl of Aquitaine)] மற்றும் லா பெல் எண்டொர்மி [La Belle Endormie (Sleeping Beauty)] என்பதாகும். இது, பழைய மையத்திலுள்ள சுவர்களில் மாசுபாடினால் படிந்திருக்கக்கூடிய கருப்பு மாசினால் சூட்டப்பட்ட பெயர் ஆகும். ஆனால் தற்பொழுது, இந்நகரின் ஒரு பகுதி கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பொர்த்தோ உலகின் மிகப் பெரிய மது தொழில் துரையின் தலையங்கம் ஆகும். இது உலகின் முக்கிய மது கண்காட்சியான வயினெக்ச்போவின் (Vinexpo) பிறப்பிடமாகும். இந்நகரம் தனது மது விற்பனையின் மூலம் ஆண்டிற்கு 14.5 பில்லியன் வரை வருமானம் ஈட்டுகிறது. பொர்த்தோ மதுவானது இவ்விடத்தில் எட்டாம் நூற்றாண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று வரலாறு கூறுகிறது. இதன் வரலாற்று சிறப்பு மிக்க பகுதி யுனெச்கோ உலக பாரம்பரிய வரிசையில் (UNESCO World Heritage List), பதினெட்டாம் நூற்றாண்டின் “சிறந்த நகர்ப்புற மற்றும் கட்டடக்கலையின் குழுமம்” என பாராட்டப் பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் பொர்தோ பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொர்தோ&oldid=4069601" இலிருந்து மீள்விக்கப்பட்டது