உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, இந்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதற்காக சனவரி 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் 124-வது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. [1]முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.[2]

இட ஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள்

[தொகு]

முன்னேறிய வகுப்பில் உள்ளவரின் ஆண்டு வருமானம் ரூபாய் .8 இலட்சத்துக்கும் கீழ் வருமானம் பெறுவோர் 10% இட ஒதுக்கீடு பெற தகுதி உடையவர்கள்.அதேநேரத்தில் ஐந்து ஏக்கருக்கு மேல், வேளாண்மை நிலம் வைத்திருப்போர், நகராட்சி பகுதிகளில் 1000 சதுர அடிக்கு மேல் குடியிருப்பு வீடு வைத்திருப்பவர்கள், சில குறிப்பிட்ட நகராட்சிப் பகுதிகளில் 100 சதுர கெஜத்திற்கும் மேல் வீட்டு மனை வைத்திருப்பவர்கள் மற்றும் சில குறிப்பிட்ட நகராட்சிகளில் 200 சதுர கெஜத்திற்கும் மேல் வீட்டு மனை வைத்திருப்பவர்களுக்கு 10% இட ஒதுக்கிடு பொருந்தாது.[3]

விதி விலக்கு

[தொகு]

மத்திய அரசின் நேரடித் தேர்வில் குரூப் ஏ மற்றும் அதற்கும் கீழான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பதவியிடங்களுக்கு 10% இட ஒதுக்கீடு முறை பொருந்தாது.

மாநிலங்களில் 10% இட ஒதுக்கீடு

[தொகு]

பொதுப்பிரிவினரின் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டிற்கு மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என இந்திய அரசு கூறியுள்ளது.[4]

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான சான்றிதழ்

[தொகு]

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான இட ஒதுக்கீடு பெற அதற்கான வருமானச் சான்றிதழ் மற்றும் சொத்துச் சான்றிதழை வருவாய்த் துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற வேண்டும்.[5] மேலும் வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களின் வருவாயை கணக்கிட்டே அளிக்க வேண்டும் என, வட்டாட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]