உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னையா பொன்லிங்கேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்லிங்கேசுவரர் கோயில் ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள பொன்னையா நகரில் அமைந்துள்ளது. மூலவர் பொன்லிங்கேசுவர் என்றும், அம்பிகை பொற்றாமரைச் செல்வி என்றும் அழைக்கப்படுகிறார், இத்தலத்தில் ஆறு தலமரங்கள் உள்ளமையும், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்வசம் நடப்பதும் சிறப்பாகும்.[1]

மேடைவிநாயகர்

[தொகு]

இத்தலத்தில் சிறுமேடையமைத்து விநாயகரை மக்கள் வழிபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வந்துள்ளார். அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கும் சிலைகள் அமைத்து வழிபாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டாராம். அதனால் மக்கள் சிவபெருமான் மற்றும் உமைக்கு சிலைகள் அமைத்து வழிபாடு செய்துள்ளனர்.

சன்னதிகள்

[தொகு]

இக்கோயிலில் ஆஞ்சநேயர், ரங்கநாதர், வள்ளி தெய்வானை உடனுரை கல்யாண சுப்பிரமணியர், பைரவி, சாமுண்டி, துர்கை மற்றும் வன்னிமர பிரம்மா ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

சிறப்பு

[தொகு]

விரும்பியபடி திருமணம் நடக்க இத்தலத்தில் அம்பிகையை வழிபடுகின்றனர். அவ்வாறு திருமணம் நிறைவேறியதும் திருமண அழைப்பிதழ்களை இங்குவந்து தொங்க விடுகின்றார்கள்.[2] திருவையாத்தி, வில்வம், பஞ்சவில்வம், இலந்தை, வன்னிமரம், மாவலிங்க மரம் என ஆறு தலமரங்கள் உள்ளன.

விழாக்கள்

[தொகு]

சிவராத்திரி ஐப்பசி அன்னாபிசேகம் திருக்கார்த்திகை திருவாதிரை நவராத்திரி மாத பிரதோசம் கார்த்திகை பொற்றாமைச் செல்விக்கு ஊஞ்சல் வழிபாடனது வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெறுகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. பொன்லிங்கேஸ்வரர் குமுதம் பக்தி ஸ்பெசல் - 19.05.2016 பக்கம் 44
  2. பொன்லிங்கேஸ்வரர் குமுதம் பக்தி ஸ்பெசல் - 19.05.2016 பக்கம் 45