பொன்னப்ப நாடார்
பொன்னப்ப நாடார் [1] கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு இரண்டு முறையும், தமிழக சட்டமன்றத்திற்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருவிதாங்கூர்-கொச்சின்
[தொகு]1952 ல் நடந்த திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தேர்தலில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலிலருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசு சார்பில் போட்டியிட்ட ஏ கேப்ரியலைதோற்கடித்தார். கேப்ரியேல் 2,718 வாக்குகளுக்கு எதிராக பொன்னப்ப நாடார் 17,084 வாக்குகளைப் பெற்றார். தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளின் மொத்தம் 25,512 ஆகும்.[2] அதே தொகுதியில் இருந்து 1954 ல் நடந்த இடைக்காலத் தேர்தலில் மீண்டும் கேப்ரியேலை தோற்கடித்தார்.[3]
தமிழ்நாடு மாநிலம்
[தொகு]கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைந்த பின்னர் மூன்று முறை அவர் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 தேர்தலில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .[4] மேலும் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் [5] இவரது மகன் பொன். விஜயராகவன், ஓர் அரசியல்வாதியும் கூட.
பொன்னப்ப நாடார் பற்றி
[தொகு]பொன்னப்ப நாடார் 11 ஏப்ரல் 1921 இல் பிறந்தார். (ஆனால் 03 மார்ச் 1923 பள்ளிக்கூட பதிவுகளின்படி) பிறந்த இடம் பாலவிளை, கருங்கல், மிடாலம் கிராமம், விளவங்கோடு தாலுகா, கன்னியாகுமரி மாவட்டம். தந்தை என்.ராகவன் நாடார் அம்மா அம்மால், இவருக்கு ஒரு சகோதரன் ஆர்.தங்கப்பன் நாடார் மற்றும் இரண்டு சகோதரிகள் பல்தங்கம், தங்கம்.
பள்ளிப்படிப்பு
[தொகு]திரு.பொன்னப்ப நாடர் செயின்ட் ஆந்தோணியார் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையும் முஞ்சிறை அரசு நடுநிலைப்பள்ளியில் (ஆறு முதல் எட்டாம வகுப்பு வரையும்), மற்றும் இரணியல் மேல்நிலைப்பள்ளி (ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையும்) ஆகிய மூன்று வெவ்வேறு பள்ளிகளில் அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் தனது பத்தாம் வகுப்பு (E.S.L.C) தேர்வை 1937 ஆம் ஆண்டில் எழுதினார்.
உயர் படிப்புகள்
[தொகு]1942 ஆம் ஆண்டில் திரு. பொன்னப்ப நாடர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ (கான்சு) பட்டம் பெற்றார். இவர் பல்கலைக்கழகம் அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றார். தனது கல்லூரி நாட்களில் பேட்மிண்டன், ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார். அவரது சிறந்த ஆங்கில புலமை மற்றும் ஆங்கில பேச்சாற்றல் கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டில் திருவனந்தப்புரம் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் முடித்தார்.
இளம் வழக்கறிஞராக
[தொகு]திரு. பொன்னப்ப நாடரின் மூத்த சகோதரர் திரு. ஞானசிகமணி இவரை இளைய வழக்கறிஞராக இணைத்துக்கொண்டார். மேலும் திரு. ஞானசிகமணியின் வழிகாட்டியான திரு. நேசமணி அவர்களை பொன்னப்பா நாடருக்கு அறிமுகம் செய்து வைத்தார். திரு. நேசமணி “நீங்களே ஒரு நல்ல அரசாங்க வேலையைப் பெறலாம், உங்களுடைய படிப்புகள் அதை எளிதாக்கும் என்று அறிவுரை கூறினார். அதற்கு திரு. பொன்னப்ப நாடர் பதிலளித்தார்,“ இதை நான் அறிவேன், இளைய வழக்கறிஞராக பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் அதுவே எனக்கு விருப்பம் என்றார்”. கடுமையாகவும் ஆர்வத்துடன் சட்டத்தின் தந்திரங்களைக் கற்றுக்கொண்டார். இவரின் அர்ப்பணிப்பால் தலைமை பிரதிநிதியாக மாற்றினார். திரு. பொனப்ப நாடார் விசாரணையில் இருக்கும்போது நீதிபதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வாதங்களை தயாரிப்பதில் மிகவும் திறமையானவர், அவர் தயாரித்த வாதங்கள் ஒப்பிடமுடியாதவை.
குடும்ப வாழ்க்கை
[தொகு]திரு.பொன்னப்ப நாடார் திருமதி ரோச்லெட் என்பவரை 11 நவம்பர் 1949 அன்று இருவருக்கும் திருமணமானது. திக்கணங்கோடு அருகே பட்டவிலியைச் சேர்ந்த திரு.அறுமுகன் நாடரின் மூத்த மகள் ரோச்லெட். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.
பொன். விஜயராகவன் (வழக்கறிஞர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்), கஸ்தூரி, ராஜேஸ்வரி (ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி), ரவீந்திரன் (தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்), கிருஷ்ணகுமார் (வழக்கறிஞர்), விஜயலட்சுமி (உதவி பேராசிரியர்)
வழக்கறிஞராக அவரது வாழ்க்கை
[தொகு]திரு. பொன்னப நாடார் கன்னியாகுமரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மிக சிறந்து விளங்கினார், இதன் போது அவர் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Association) தலைவராக தனது கடமைகளைச் சிறப்பாக செய்தார்.அவர் ஆங்கில புலமை மற்றும் வாதத்திறனில் வல்லவர் இதனால் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து உயர் மதிப்பீடுகளைப் பெற்றது தந்தது. அவரது வாதங்களைக் கேட்க மக்கள் கூட்டம் நீதிமன்றத்தற்க்கு வருவார்கள்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]முஞ்சிறை நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போது பள்ளி ஆசிரியர்கள் அல்லது அதிகாரிகள் மாணவர்களின் சாதியை அடிப்படையாகக் கொண்டு இரண்டு குழுக்களாகப் பிரித்து மதிய உணவை வழங்குவர்கள். திரு. பொன்னப்ப நாடார் இந்த நடைமுறையால் மிகுந்த வேதனை அடைந்தார், இதனால் சில வேளைகளில் மதிய உணவை புறக்கணிப்பார். இது போன்ற நிகழ்வுகள் அவரை அரசியலிலும் சமூகப்கணியிலும் ஈடுபட துண்டியதில் மிக முக்கிய பங்கு வகித்தது. இதுபோன்ற மற்றொரு சம்பவம் திருவிதாங்கூரில் விவசாய விளைபொருட்களை வரிகளாக வசூலித்தது. விவசாயிகள் தங்கள் பயிர்கள் போதுமான விளைச்சலை கொடுக்காத நேரங்களில் கூட கட்டாயமாக தங்கள் வரிகளை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நியாயமற்ற நடைமுறை அரசியலில் நுழைவதற்கான அவரது விருப்பத்தை மேலும் அதிகரித்தது. திருவனந்தபுரத்தில் தனது கல்லூரி நாட்களில், அவர் வில்சு மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தார், அங்கு அவர் பல சுதந்திர போராளிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்கினார்.
மரணம்
[தொகு]12 அக்டோபர் 1976 அன்று மூத்த அரசியல்வாதியின் மரணத்திற்கு தமிழகம் முழுவதும் வருந்தியது. திரு.பொன்னப்ப நாடார் 10 அக்டோபர் 1976 அன்று நடைபெறவிருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் 08 அக்டோபர் 1976 அன்று மும்பைக்கு புறப்பட்டார். மாநாடு முடிந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் உடனடியாக 11 அக்டோபர் 1976 அன்று சென்னைக்கு திரும்ப வேண்டியிருந்தது. அவர் நள்ளிரவில் விமானத்தில் ஏறினார், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் தீப்பிடித்து எரிந்து விமானத்தில் இருந்த அனைவரும் இறந்தனர். அவரது உடலை மும்பையிலேயே தகனம் செய்ய வேண்டியிருந்தது. அவரது சாம்பல்கள் (அஸ்தி) சென்னைக்கு கொண்டு வரப்பட்டன, அங்கு அவை மெரினாவில் ஒரு பகுதி கரைக்கப்பட்டது. மீதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பாலவிளைக்கு கொண்டு வரப்பட்டது, அங்கு சடங்குகள் செய்யப்பட்டு பின்னர் அவரது அஸ்தியின் ஒரு பகுதி கன்னியாகுமரியில் கடலில் கரைக்கப்பட்டது.
சாதனைகள்
[தொகு]பதவிகள்
[தொகு]திரு.பொன்னப்ப நாடரின் குணங்கள்
[தொகு]திரு.பொன்னப்ப நாடார் மிகுந்த எழிமையான குணமுடையவர். அவர் தனது உடை மற்றும் உணவுப் பழக்கத்தில் எளிமையாகவே இருந்தார். தன்னை அணுகியவர்களுக்கு அவர்களை நிராகரிக்காமல் அவர் எப்போதும் தன்னல் ஆனவற்றை வழங்கினார். தன்னுடைய பார்வையாளர்கள் அவர்களுடன் உரையாடுவதற்கு முன்பு தங்களை அமர்ந்திருப்பதை அவர் எப்போதும் உறுதிசெய்தார். அவர் பொதுமக்களை சந்திக்க நடந்து அல்லது பொது பேருந்தில் பயணம் செய்து சந்திப்பரர். அவர் ஏழைகளுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும் சேவை செய்யும் விதமான வாழ்க்கையை வாழ்ந்தார்.
http://www.pannappanadarfoundation.org/about-pannappa-nadar/ பரணிடப்பட்டது 2019-07-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R.Ponnappa Nadar
- ↑ Elections to the Travancore-Cochin Legislative assembly- 1951 and to the Madras assembly constituencies in the Malabar area பரணிடப்பட்டது 3 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Interim Election to the Travancore-Cochin Assembly – 1954 பரணிடப்பட்டது 6 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.