உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்குன்னம் வர்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்குன்னம் வர்கி
பிறப்பு(1910-06-30)30 சூன் 1910
எடத்வா ஊராட்சி, ஆலப்புழா, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2 சூலை 2004(2004-07-02) (அகவை 94)
Pampady, கோட்டயம், கேரளா, இந்தியா
தொழில்எழுத்தாளர், சமூகச் செயல்பாட்டளார், ஆசிரியர், சுதந்த்திர்ப் போரட்ட வீரர்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியன்
வகைசிறுகதை, கதை, திரைக்கதை, கதை, கவிதை, கட்டுரை
குறிப்பிடத்தக்க விருதுகள்வாலோத்தல் விருது 1994

எழுத்தச்சன் புரஸ்கரம் 1997

லலதாம்பிகா சகித்திய விருது 2002

முட்டத்து வர்கி விருது 2002

பொன்குன்னம் வர்கி (Ponkunnam Varkey) (1 ஜூலை 1910 - 2 ஜூலை 2004) கேரளாவிலிருந்து வந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் 120 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 16 நாடகங்களை எழுதியுள்ளார் மற்றும் அவரது படைப்புகளில் சமூக அக்கறையை எப்போதும் கடைபிடித்த ஒரு எழுத்தாளராக பரவலாக பாராட்டப்பட்டார். அவரது காலத்தில் சமுதாயத்தில் இருந்த பல தீமைகளுக்கு எதிராக வர்கி போராடினார். அவரது கதைகள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் மதிப்பை உயர்த்தின. சமூக அநீதிக்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்த தனது இலக்கியத்தைப் பயன்படுத்தினார். கேரளாவில் இலக்கிய எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். அவர் கேரள சாகித்திய அகாதமி மற்றும் சாகித்திய பிரவர்த்தக கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த்தார்.

சுயசரிதை

[தொகு]

வர்கி 1910 ஜூலை 1 அன்று ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு அருகில் உள்ள எடத்துவா என்ற ஊரிலுள்ள ஒரு சிரியன் கிரிஸ்துவர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை குட்டப்பன் ஜோசப் வர்கி தாயார் அன்னம்மா வர்கி ஆவர். அவரது தந்தையின் இறப்புக்குப் பிறகு வர்கி கோட்டயம் பொன்குன்னத்திலுள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றார். வர்கி தன்னைப் பற்றி கூறும்போது, அவருடைய குழந்தை பருவம் அவ்வளவு பாதுகாப்பான ஒன்றல்ல என்றும் ஆனால் உயிர் பிழைப்பதற்காக வாழ்ந்ததாக கூறுகிறார்.[1] பள்ளியில் படிக்கும்போது, அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்டார், மேலும் அவரது ஆரம்பகால எழுத்துக்கள் இந்திய விடுதலை இயகத்தின் கருப்பொருளுடன் சம்பந்தப்பட்டிருந்தது. உயர்நிலைப் பள்ளி படிப்புகளுக்குப் பிறகு அவர் மலையாள வித்வான் தேர்வில் தேர்ச்சி பெற்றார்; மொழி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி பின்னர், பொன்குன்னம் அருகே ஒரு கத்தோலிக்க பள்ளியில் சேர்ந்தார். ஆனால் நிர்வாகத்துடனான அவரது உறவு சரியாக அமையவில்லை. பின்னர் அப்பள்ளியை விட்டு வெளியேறி 1942இல் பம்பாடியிலுள்ள வெர்னாகுலர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். விரைவில் அவர் இந்த வேலையையும் துறந்து சுதந்திர போராட்டத்தில் குதித்து சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

அவர் பொதுவுடைமைக்கட்சியுடன் சிறிது காலம் தொடர்பு கொண்டிருந்தார், மேலும் புரோகமன கலா சாகித்திய சங்கத்தின் (முற்போக்கான எழுத்தாளர்கள் மன்றம்) ஐந்து ஆண்டுகள் செயலாளராக இருந்தார். அவர் தனது 94ஆவது பிறந்த நாளுக்கு மறுநாள், 2004 ஜூலை 2 அன்று இறந்தார். அவருடைய மனைவி கிளாராம்மா 1991 இல் இறந்தார். அவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர்.[2]

இலக்கிய வாழ்க்கை

[தொகு]

1939 ஆம் ஆண்டு அந்தக் காலத்திலிருந்த எழுச்சியாளர்களிடமிருந்து பரபரப்பான விமர்சனங்களைப் பெற்ற கவிதைகளான திருமுல்காழ்ச்சா என்ற எழுத்தின் மூலம் இலக்கியத் துறையில் வர்கி நுழைந்தார்.[1] இத்தொகுப்பு 1939 இல் சென்னை அரசாங்கத்தின் விருதை வென்றது. வர்கி விரைவில் அவரது பாதையை மாற்றிக்கொண்டு உரைநடையை தேர்வு செய்தார். கேரளாவின் சமூக அரங்கில் நடந்து கொண்டிருக்கும் அநீதிக்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்த தனது இலக்கியப் பணியைப் பயன்படுத்தினார். இது அவரை திவானுடனான நேரடி மோதலில் கொண்டு சேர்த்தது. மந்திரிக்கெட்டு மற்றும் மாடல் என்ற அவரது சிறுகதைகள் சுதேச அரசாங்கத்தால் 1946 ல் தடை விதிக்கப்பட்டது. திருவிதாங்கூர் அரசால் (இப்போது தெற்கு கேரளா) ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு வர்கி ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.[3] 1973 ஆம் ஆண்டில் கேரள சாகித்திய அகாடமி தலைவராக வர்கி நியமிக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டில், கேரள அரசாங்கத்தின் உயர்ந்த இலக்கிய கௌரவமான எழுத்தசன் புரஸ்கரம் விருது வர்கிக்கு வழங்கப்பட்டது.[1]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

அவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதினார். மேலும், இரண்டு படங்களையும் தயாரித்தார். திரைப்பட துறையில் அவரது நுழைவு நவலோகம் படத்தின் மூலம் இருந்தது, அதில் அவர் கதை மற்றும் உரையாடல் எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையில் தொழிலாளர் நலன் சார்ந்த உரையாடல்கள் அதிக அளவில் இருந்தது, இதனால் இந்தத் திரைப்படம் திரைப்படத் தணிக்கை வாரியத்தால் பெரும் வெட்டுக்களைப் பெற்றது.[4] அவர் சினேகசீமா, பார்யா, விதித்தன்னா விளக்கு, ஸ்கூல் மாஸ்டர், ஆஷா தீபம், போன்ற பல படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.[5] மக்கம் பிரான்ன மன்கா மற்றும் சலனம் என்ற இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார். மலையாளத் திரைப்பட வல்லுநர்கள சங்கத்தின் (MACTA) கௌரவ உறுப்பினர் ஆவார்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Ponkunnam Varkey இறந்த" பரணிடப்பட்டது 2004-08-24 at the வந்தவழி இயந்திரம் . இந்து மதம் . 4 ஜூலை 2013 இல் பெறப்பட்டது.
  2. "Ponkunnam Varkey கடந்து செல்கிறது" பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் . டெக்கான் ஹெரால்டு . 4 ஜூலை 2013 இல் பெறப்பட்டது.
  3. சஹிதிகரா டைரக்டர்; கேரள சாகித்யா அகாடமி, திரிசூர்
  4. "நவவாக்கம் 1951" பரணிடப்பட்டது 2013-07-03 at Archive.today . இந்து மதம் . 4 ஜூலை 2013 இல் பெறப்பட்டது.
  5. "SNEHASEEMA 1954" பரணிடப்பட்டது 2012-06-26 at the வந்தவழி இயந்திரம் . இந்து மதம் . 4 ஜூலை 2013 இல் பெறப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்குன்னம்_வர்கி&oldid=3252586" இலிருந்து மீள்விக்கப்பட்டது