பொதும்பில் கிழார்
Appearance
பொதும்பில் கிழார் சங்ககாலப் புலவர்.அவை நற்றிணை 57 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
இவரது மகனார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் என்பவரும் ஒரு புலவர்.
மந்தி வன்பறழ்
[தொகு]ஆமான் கூட்டம் வேங்கை மரத்தடியில் வாழும்போது மந்தி ஆமானின் பாலைக் கறந்து தன் குட்டியின் கை நிறையப் பெய்யும் மலையில் வாழ்பவன் அவன். (அவள் தினைப்புனம் காத்தபோது அவன் அவளோடு இருந்தான்.) தினை கொய்பதம் கொண்டதும் அவள் நலம் தொலைந்தது. - தலைவி வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதைத் தோழி இவ்வாறு தலைவனுக்கு உணர்த்துகிறாள். நற்றிணை 57