பொதுநலவாய இராச்சியம்
பொதுநலவாய இராச்சியம் (Commonwealth realm) பொதுநலவாய நாடுகள் உறுப்பினராகவும் தங்கள் அரசமைப்புச் சட்டப்படியான அரசராக, ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசை கொண்டதும், மற்ற இராச்சியங்களுடன் பொதுவான அரச வாரிசு முறைமை கொண்டதுமான இறைமையுள்ள நாடு ஆகும்.[1][2] இத்தகைய இராச்சியங்கள் 15 உள்ளன.
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்க ஒன்றியம், ஐரிய கட்டற்ற அரசு மற்றும் நியூ பவுண்ட்லாந்திற்கு மேலாட்சித் தகுதி வழங்கியது. இதன்படி பிரித்தானியப் பொதுநலவாயத்தில் முழுமையான அல்லது கிட்டத்தட்ட முழுமையான சட்டமன்ற விடுதலையும் சமநிலையும் இவற்றிற்கு கிடைத்தன. மேலும் ஒரே நாட்டுத் தலைவரை ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ளவும் வகை செய்தது. இதன்படி 1947இல் இந்தியா, பாக்கித்தானும் 1948இல் இலங்கையும் மேலாட்சி நிலை பெற்றன. 1950களில், ஐக்கிய இராச்சியம் உள்ளிட்டு இக்குழுமத்தில் இருந்த நாடுகள் (இதில் குடியரசாக மாறிய இந்தியாவும் அயர்லாந்தும் தவிர்த்து) தங்களுக்கான சமநிலையை நிறுவுவதற்காக இராச்சியம் (realm) என அழைக்கப்படலாயின. இச்சொல் எலிசபெத் அரசியின் முடிசூட்டு விழாவின்போதும் மற்ற நாடுகளின் சட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய இராச்சியங்கள்
[தொகு]அரசர் சார்லசு III கீழ்வரும் நாடுகளுக்கு அரசராவார்:
- அன்டிகுவா பர்புடா
- ஆஸ்திரேலியா
- பகாமாசு
- பெலீசு
- கனடா
- கிரெனடா
- ஜமேக்கா
- நியூசிலாந்து
- பப்புவா நியூ கினி
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- செயிண்ட் லூசியா
- செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
- சொலமன் தீவுகள்
- துவாலு
- ஐக்கிய இராச்சியம்
அரசர் தனது சார்பாக ஓர் தலைமை ஆளுநரை நியமிக்கிறார்.தலைமை ஆளுநர் அந்த இராச்சியத்தின் அரசுடன் கலந்தாய்ந்து அரசியால் நியமிக்கப்படுகிறார். இவருக்கு அரசரிக்குரிய அனைத்து அதிகாரங்களும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்துச் சட்டங்களுக்கும் ஒப்புதல் கையொப்பமிடுகிறார்; தேவையானால் அரசியின் தீர்வுக்கோ அல்லது அரசரின் கையொப்பம் பெறவோ காத்திருக்க இயலும். அரசி எலிசபெத் II 1982இல் கனடா சென்றிருந்தபோது கனடிய உரிமைகளும் சுதந்திரங்களுக்குமான பட்டயம் சட்டத்தில் கையெழுத்திட்டார்; 1986இல் கான்பெராவில் ஆத்திரேலியச் சட்டம் 1986த்திலும் அரசியே கையெழுத்திட்டார்.
அரசரிக்கான பட்டம் ஒவ்வொரு இராச்சியத்திலும் தனிப்பட்டு உள்ளது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "What is a Commonwealth Realm?". Royal Household. பார்க்கப்பட்ட நாள் 6 October 2009.
- ↑ Royal Household. "Her Majesty the Queen". Queen's Printer. பார்க்கப்பட்ட நாள் 23 January 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Commonwealth Secretariat official site
- The Commonwealth - UK government site
பொதுநலவாயம்
[தொகு]- United Commonwealth பரணிடப்பட்டது 2006-10-10 at the வந்தவழி இயந்திரம் Main all-Commonwealth group
ஆத்திரேலியா
[தொகு]- Australian Monarchist League (traditionalist constitutional monarchists)
- No Republic - Australians for Constitutional Monarchy (Moderate constitutional monarchists)
கனடா
[தொகு]- Canadian Monarchy - The Official Site பரணிடப்பட்டது 2008-09-18 at the வந்தவழி இயந்திரம்
- Canadian Monarchist ONLINE
- Monarchist League of Canada
நியூசிலாந்து
[தொகு]- Monarchist League of New Zealand பரணிடப்பட்டது 2003-08-31 at the வந்தவழி இயந்திரம்