பைலாடிலா மலைத்தொடர்
பைலாடிலா மலைத்தொடர் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உச்சி | பெயரிடப்படாத மலை, தந்தேவாடா மாவட்டம், சத்தீசுகர், இந்தியா |
உயரம் | 1,276 m (4,186 அடி) |
பட்டியல்கள் | இந்திய மாநிலங்களில் உயரமா புள்ளிகளின் பட்டியல் |
பரிமாணங்கள் | |
நீளம் | 70 km (43 mi) SW-NE |
அகலம் | 25 km (16 mi) NW-SE |
புவியியல் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
தொடர் ஆள்கூறு | 18°42′00″N 81°13′10″E / 18.70000°N 81.21944°E |
ஏறுதல் | |
எளிய வழி | மலையேறுதல் |
பைலாடிலா மலைத்தொடர் (Bailadila Range) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து சுமார் 200 கி.மீ மேற்கே தக்காண மேட்டு நிலத்தில் அமைந்த ஒரு மலைத்தொடராகும். இது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கிராந்துல் நகருக்கு அருகில் அமைந்துள்ளது[2]. காளையின் திமில் போல காட்சியளிப்பதால் இம்மலைத்தொடருக்கு பைலாடிலா மலைத்தொடர் என பெயர் தருவிக்கப்பட்டுள்ளது.
சத்தீசுகரின் உயரமான புள்ளி
[தொகு]தக்காண மேட்டுநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் பைலாடிலா மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்திராவதி ஆற்றுக்குத் தெற்கே 70 கிலோமீட்டர் நீளத்துடன் 1276 மீட்டர் உயரத்துடன் கிட்டத்தட்ட தென்மேற்கு-வடகிழக்கு திசைநோக்கி இம்மலை நீண்டுள்ளது [3]. சத்தீசுக்கரிலுள்ள மிக உயர்ந்த மலை உச்சிகளில் இதுவும் ஒன்றாகும். இம்மலைகள் தந்தேவாடா மாவட்டத்தின் தலைமையிடமான தந்தேவாடாவி ற்கு தென்மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது [4]. செழித்து இருந்தன. முன்னர் பைலாடிலா மலைச் சரிவுகளில் அடர்ந்த மரங்கள் செழித்து இருந்தன ஆனால் மலைத்தொடரில் சுரங்கப் பணி நடைபெற்று தரமான இரும்புத் தாது வெட்டியெடுக்கப்படும் தொழில் வளர்ச்சியடைந்த காரணத்தால் இம்மலையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bailadila range highest point (1276m), Highest point in Chhattisgarh
- ↑ Bailadila Hills, Dantewada district, Chhattisgarh
- ↑ Geographical Features of the Flora of the Bailadila Range in Bastar State[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The Journal of the Bombay Natural History Society - Google Books
- ↑ "National Mineral Development Corporation, Dantewada district, Chhattisgarh". Archived from the original on 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.