பைரவர் கோயில்
பைரவர் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையிலுள்ள மூலவர் பைரவர் அம்சமாக இருக்கும் பட்சத்தில் அக்கோயில் பைரவர் கோயில் என்றழைக்கப்படுகிறது. அந்த அம்சமானது வெவ்வேறு திருநாமங்கள் கொண்டு காணப்படுகின்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற வேலூர் மாவட்டம் கண்டிப்பேடு பகுதியிலுள்ள பைரவநாதீசுவரர் கோயில்[1] தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியிலுள்ள காலபைரவர் கோயில் [2][3] திருச்சிராப்பள்ளி மாவட்டம் மலைக்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள பைரவநாதசுவாமி கோயில்[4] ஆகியவை சில முக்கிய பைரவர் கோயில்களாகும்.
உலகிலேயே மிகப்பெரிய, 39 அடி உயர பைரவ சிலையுடன் கட்டப்பட்டுள்ள இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில், ஈரோடு மாவட்டத்தின் அவல்பூந்துறை பகுதிக்கு அருகில் இராட்டைசுற்றிபாளையம் புறநகர்ப் பகுதியில், 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ஆம் நாள் கும்பாபிசேகம் நடைபெற்று, அமையப் பெற்றுள்ளது.[5]
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புறநகர்ப் பகுதியில் சோழபுரம் பகுதியிலுள்ள பைரவேசுவரர் கோயில் மற்றும் ஏழு பைரவர் சன்னதிகளுடன் கூடிய சென்னை மாவட்டத்தின் திருவான்மியூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மருந்தீசுவரர் கோயில்[6] ஆகியவை பைரவருக்கு பெருமை சேர்க்கும் கோயில்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arulmigu Bairavanatheeswarar Temple, Kandipedu - 632106, Vellore District [TM004280].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "Arulmigu Kala Bairavar Temple, Adhiyamankottai - 636807, Dharmapuri District [TM004912].,BAIRAVAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ Suriyakumar Jayabalan. "Bhairava Temple: அதியமான் கட்டிய பைரவர் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "Arulmigu Bairavanathaswamy Temple, Near Rock Fort, Thiruchirappalli - 620008, Thiruchirappalli District [TM025752].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ செல்வகுமார் (2022-12-05). "Bhairava temple: மிகப்பெரிய பைரவர்.. இவ்வளவு சிறப்பா? மகா கும்பாபிஷேக விழா எப்படியிருக்கும்?". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "பைரவரின் கோலங்கள்... திருத்தலங்கள்!". Hindu Tamil Thisai. 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.